பொது செய்தி

தமிழ்நாடு

2வது ரோப்கார் பணிகள் தீவிரம்

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பழநி : ஊரடங்கு தளர்வுக்குப் பின் 2வது ரோப்கார் அமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.பழநி முருகன் மலை கோயிலுக்கு செல்ல ரோப் கார், வின்ச், படிப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். த ற்போது மூன்று வின்ச்கள் செயல்பாட்டில் உள்ளன. வின்ச் பயன்படுத்தி பக்தர்கள் மேலே செல்ல 7 நிமிடங்கள் ஆகும். அதேபோல் ரோப் காரில் செல்லவும் மூன்று நிமிடங்கள் ஆகும்.இதில்

பழநி : ஊரடங்கு தளர்வுக்குப் பின் 2வது ரோப்கார் அமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.பழநி முருகன் மலை கோயிலுக்கு செல்ல ரோப் கார், வின்ச், படிப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். த

ற்போது மூன்று வின்ச்கள் செயல்பாட்டில் உள்ளன. வின்ச் பயன்படுத்தி பக்தர்கள் மேலே செல்ல 7 நிமிடங்கள் ஆகும். அதேபோல் ரோப் காரில் செல்லவும் மூன்று நிமிடங்கள் ஆகும்.இதில் தற்போது பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் அருகிலேயே 2 வது ரோப்கார் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இதனால் குறைந்த காலத்தில் அதிக பக்தர்கள் மலைக்கோயில் சென்று வரலாம். கொரோனா தொற்று காலகட்டத்தில் 2வது ரோப்கார் பணிகள் நடைபெறாமல் இருந்தது.இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்குப் பின் நேற்று மீண்டும் பணி துவங்கியது. பாறைகளை உடைத்து அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் நடந்தன. 2வது ரோப்கார் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூலை-202107:43:18 IST Report Abuse
Bhaskaran வரிசையில் நிற்பவர்களுக்கு முன்னுரிமை கிடையாது அதிகப்பணம் கொடுத்தால் தரகர்கள் அலுவலர்கள் உடனடி டிக்கெட் கொடுக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X