அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : 'நீட்' பித்தலாட்டம்!

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :கே.நாகலட்சுமி, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்' என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவருக்கு, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது நன்கு தெரியும். ஆட்சிக்கு வந்த பின், நீட் தொடர்பான

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
கே.நாகலட்சுமி, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்' என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவருக்கு, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது நன்கு தெரியும். ஆட்சிக்கு வந்த பின், நீட் தொடர்பான கேள்வி எழும் என்பதால், அந்த தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.latest tamil newsஅந்த குழு அமைக்க மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டது. நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.,வும் தான். நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. அப்போது, 'நீட் தேர்வு அவசியம்' என வாதாடி, அதை தமிழகத்திற்கு பெற்று தந்தவர், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி. உண்மையாகவே நீட் தேர்வுக்குஎதிராக தி.மு.க., இருக்கிறது என்றால், அதன் தோழமை கட்சியான காங்கிரசிடம் சொல்லி, அப்போதே நளினியை தடுத்து இருக்கலாமே; ஏன் செய்யவில்லை?


latest tamil newsஇப்போது நீட் தாக்கம் குறித்து அறிவதற்காக குழு அமைத்து, அறிக்கை வாங்கிஉள்ளனர்;அதனால் என்ன பலன்? இவர்களே நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, அது கட்டாயம் வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடி, பின் ரத்து செய்ய வேண்டும் என போராடி, காரணம் கண்டறிய குழு அமைத்து... எவ்வளவு காமெடி களேபரங்கள் செய்கின்றனர்! இவர்களின் அரசியல் காரணங்களுக்காக, மக்களின் வரிப்பணம் அல்லவா விரயமாகிறது.

நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு உண்டா என ஆராய குழு அமைத்த தி.மு.க., அரசு, 'டாஸ்மாக்' கடையால் ஏற்படும் தாக்கம் குறித்து அறிந்து கொள்ள குழு அமைக்க முன்வருமா? இந்த குழு அமைக்காமல் இருந்தால், மாணவர்கள் குழப்பம் அடையாமல் நீட் தேர்விற்கு தயாராகி இருப்பர். இப்போது மாணவர்கள் குழப்பமான மனநிலையுடன் இருப்பர். மாணவர்களின் வாழ்வோடு விளையாடுகிறது தி.மு.க., அரசு.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Aruna - Trichy,இந்தியா
27-ஜூலை-202121:14:58 IST Report Abuse
S.Aruna நீட் தேர்வுக்கு தயாராகவேண்டிய மாணவர்களுக்கு ஓட்டுரிமையில்லை. திமுக வெற்றிபெற்றது மே இரண்டில், கொரோன இல்லையெனில் அவர்கள் மே மாதமே நீட் எழுதியிருக்க வேண்டும். இதிலெங்கே திமுக இவர்களை கெடுத்ததென தெரியவில்லை. காழ்ப்புணர்ச்சிமட்டுமே தெரிகிறது.
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூலை-202120:40:11 IST Report Abuse
Chinnappa Pothiraj தமிழ் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும்.தற்போது நேர்மையற்ற முறையில் பல வழிகளில் சம்பாதித்தது மட்டும் அல்லாமல் இளைஞர்களுக்கு மூலசலவைசெய்து சிந்திக்கவிடாமல் மதுப்பழக்கமும் உணவும் பணமும் கொடுத்து நேர்மையானவர்களை அடாவடி மூலம் அடக்குமுறையும் உளவுத்துறைகூட கண்காணிக்கமுடியாதபடி அத்தனை புத்திசாலித்தனமாக பொதுமக்களின் வாழ்க்கையை சூறையாடுகிறார்கள். பொதுமக்கள் யாரும் புகாரளிக்கமுடியாது அத்தனை உடல்வழி மிரட்டல்கள்,யாராலும் நிரூபிக்கமுடியாதபடி குற்றங்களை நடத்தும் அளவுக்கு செயல்திறன்கள்.இந்த அளவிற்கு கொடுமையின் உச்சத்திற்கு இவர்களை உருவாக்கியவர்கள்,வளர்த்துவிடுபவர்கள் இத்தனைக்கும்பின்னால் இவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பவர்கள் யார்.மனிதாபிமானமற்ற முறையில் கொடுமைகள் செய்வதை மிகப்பெரிய திறமைசாலியாக பொதுமக்களை அச்சுருத்துவது.நீதியின்முன் அனைவரும் சமம் என்றால்.ஏன் இத்தனை குற்றங்கள் நடக்கின்றன.ஆட்சிநடத்துபவர்கள்,உளவுத்துறை,புகழ்பெற்ற தமிழக காவல்துறை,வழக்கறிஞர்கள்,நீதியரசர்கள், ஆசிரியர்கள் அனைவரும் இந்த நாட்டில் சமூகத்தோடுதானே வாழ்கிறார்கள்.ஏன் இந்த நிலை. இதை சீர்செய்ய முடியுமா? ஜனாதிபதி ஆட்சி,இல்லையெனில் உள்நாட்டு மக்களின் பாதுகாப்பு உளவு அமைப்பு,இராணுவம் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யலாம்.யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.நாட்டில் நடப்பதை தங்களின் மனசாட்சியிடம் கேளுங்கள் கருத்து உண்மையா இல்லையா.வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
27-ஜூலை-202120:13:58 IST Report Abuse
adalarasan தமிழ் நாட்டில், மாணவர்களின் உண்மையான ,நன்மைகளை பற்றி யாரும் யோசிப்பதில்லை?அரசியல் செய்கிறார்கள். வேண்டுமென்றே ஒய் செய்திகளை பரப்புகிறார்கள்.முற்பட்ட மாணவர்கள் இடம் பிடிப்பிப்பார்கள் என்று கூறுவது முற்றிலும் பொய்அவர்கள், மருத்துவ படிப்பில், வெகு சிலரே செல்கிறார்கள். ஆசைங்க பள்ளி,மாணவர்களுக்கு றிசீர்வதின், நல்ல, முடிவு.உண்மையான புள்ளி விவரங்களை, ஆளும் கட்சியினர் கோரா மறுக்கின்றனர்.தனியார் கல்லூரிகள், கோடிக்கணக்கான, பணம் வசூல்,செய் வதை முறைப்படுத்துகிறது,நீட் தேர்வு. ரெசீர்வதின் கொள்கையில் மாற்றம் இல்லைமாணவர்கள் போட்டிமனப்பான்மையுடன், படித்து முன்னேறவேண்டும் கெட்டிக்காரர்கள், ஆனால், அரசியல்வாதிகள்,மனதை குழப்பி,அவர்களின் வாழ்க்கையை, பாழாக்குகிறார்கள்/ பாத்து லக்ஷம் மாணவர்களில், 5000,பேர்வழிகள்தான் மருத்துவம் படிக்கிறார்கள். அதை முறை,படுத்தி, தகுதியின் படி, இடம் கொடுப்பது தான் சரி.ஆகையால், அரசாங்கம், அவர்கள் தரத்தை உயர்த்தி, குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு, வசதிகளை மேன்படுத்தி, முன்னேற செய்யவேண்டும்.உச்சநீதிமன்ற, தீர்ப்பை மதிக்கவேண்டும், அரசியல் செய்யவேண்டாம் என்று வேண்டுகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X