சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. ரூபாய் 4 கோடி தங்கம் கடத்திய இருவர் கைதுசென்னை : வீட்டு உபயோக பொருட்களுக்குள் மறைத்து, 4.03 கோடி ரூபாய் மதிப்பிலான, 8.17 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவரை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' சிறப்பு விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது.

தமிழக நிகழ்வுகள்
1. ரூபாய் 4 கோடி தங்கம் கடத்திய இருவர் கைது
சென்னை : வீட்டு உபயோக பொருட்களுக்குள் மறைத்து, 4.03 கோடி ரூபாய் மதிப்பிலான, 8.17 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவரை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' சிறப்பு விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. அந்த விமானத்தில் வந்த, 104 பயணியரையும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த இரண்டு பயணியர் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அவர்களது பெட்டியில், எலக்ட்ரானிக் குக்கர், மிக்சி உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் இருந்தன.latest tamil newsஅவற்றை கழற்றி சோதனை செய்ததில், தங்கத்தகடுகள், வளையங்கள், உருளைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மொத்தம் 4.03 கோடி ரூபாய் மதிப்பிலான, 8.17 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், துபாயில் உள்ள இருவர் உறவினர்களிடம் கொடுக்குமாறு, இந்த வீட்டு உபயோக பொருட்களை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

2. உலோக சுவாமி சிலை, ஓவியம் மீட்பு ; கடத்த முயன்ற முக்கிய புள்ளி கைது
சென்னை : சென்னை கீழ்ப்பாக்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள உலோகம் மற்றும் கற்களாலான சுவாமி சிலைகளை போலீசார் மீட்டனர்; ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோவில்களில் இருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து கடத்தப்பட உள்ளதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார் சிங் தலைமையிலான போலீசார், நேற்று காலை, 11:15 மணியளவில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு, கட்டடம் ஒன்றின் மாடி அறையில், மரத்தால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடியில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள உலோக அம்மன் சிலை, இரண்டு அம்மன் கற்சிலைகள் மற்றும் பழங்கால கிருஷ்ணர் ஓவியம் பதுக்கப்பட்டு இருப்பதைகண்டுபிடித்தனர்.


latest tamil newsஇதையடுத்து, சிலை கடத்தல் முக்கிய புள்ளியான, அந்நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், 58, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.அபய்குமார் சிங் அளித்த பேட்டி:தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் நரசிம்மநாதர் கோவிலில், 1985ல் மர்ம நபர்கள் ஐந்து சிலைகளை திருடி உள்ளனர். இவற்றில், அதிகார நந்தி மற்றும் கங்கால நந்தர் சிலைகள், அமெரிக்காவில் இருப்பது தெரியவந்தது. இச்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. விரைவில், தமிழகம் எடுத்து வர உள்ளோம்.அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, விஸ்வநாதர் கோவிலில் நரசிம்மன், கிருஷ்ணா, கணேஷர், சம்பந்தர், சோமசுந்தரர், விஷ்ணு ஆகிய சிலைகள், 2017ல் திருடு போயின. இந்த சிலைகளும் அமெரிக்காவில் இருப்பது கண்டறிந்து மீட்கப்பட்டுள்ளன.

சிலை திருட்டு தொடர்பாக, 2020 - 21ல், 17 வழக்குகள் பதிந்து, 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; 40 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. புதுச்சேரியைச் சேர்ந்த ஜான்பால் ரத்தினம் என்பவரிடம் இருந்து மட்டுமே, 60 பஞ்சலோக சிலைகள் உட்பட, 74 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை கீழ்ப்பாக்கத்தில் சிலைகளை மீட்ட போலீசாருக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

3. துரைமுருகன் வீட்டில் திருட முயற்சித்தவர் கைது
வாணியம்பாடி : அமைச்சர் துரைமுருகன் பண்ணை வீட்டில் திருட முயற்சித்தவரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முஸ்லீம்பூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றியவரை பிடித்து விசாரித்தனர். அவர், வாணியம்பாடி சென்னாம்பேட்டையைச் சேர்ந்த நவீத், 35, என்பதும், கடந்த ஏப்., 12ல், ஏலகிரிமலையில் உள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் பண்ணை வீட்டில் திருட முயற்சித்து, பணம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்து, அங்குள்ள பங்களா சுவரில் ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா என்று எழுதி வைத்தவர் எனவும் தெரிந்தது.

மேலும் ஏலகிரிமலையில் பள்ளி தாளாளர் செந்தில்குமார், வாணியம்பாடி முஸ்லீம்பூரைச் சேர்ந்த அவுதார் ரகுமான் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட வீடுகளில் அவர் திருடியதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, 20 சவரன் நகைகளை மீட்டனர்.

4. வியாபாரி வீட்டிற்குள் புகுந்து 55 சவரன் நகை கொள்ளை
மயிலம் : வியாபாரி வீட்டின் கதவை உடைத்து, கத்திமுனையில் மிரட்டி 55 சவரன் நகைகைளை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த வெளியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு, 63; இவர், வீட்டின் முன் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு, மனைவி முத்துலட்சுமி, 60; மகள் விஜயகுமாரி, 29; ஆகியோர் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12:00 மணியளவில், வீட்டின் பின் பக்க கதவை உடைத்து முகமூடி அணிந்து ஐந்து பேர் கும்பல் உள்ளே புகுந்தனர். வேணு, மனைவி மற்றும் மகள் கழுத்தில் கத்தியை வைத்து, 'சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம்' என மிரட்டினர்.


latest tamil newsமூன்று பேரையும் கை, கால்கள் மற்றும் வாயை கட்டிப் போட்டு, பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் 49 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். பின் முத்துலட்சுமி அணிந்திருந்த தாலிச்செயின் மற்றும் கம்மல் உட்பட 6 சவரன் நகைகளை பறித்து மிரட்டல் விடுத்து சென்றனர்.பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போலீஸ் நிலையம் சென்று தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சாய்னா, வெளியனுார் - மயிலம் சாலையில் 2 கி.மீ., துாரம் ஓடிச் சென்று நின்றது. கொள்ளையடிக்கப்பட்ட 55 சவரன் நகைகளின் மதிப்பு 22 லட்சம் ரூபாய் ஆகும். வேணு மகள் விஜயகுமாரிக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது.

5. லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் 'டிரான்ஸ்பர்'
கோவை : வாகன ஓட்டியிடம் போக்குவரத்து பெண் போலீஸ் லஞ்சம் வாங்கும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானதால், அவரை ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர் உத்தரவிட்டார்.

கோவை, பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில், போக்குவரத்து பிரிவில் போலீசாக பணியாற்றி வருபவர் பாப்பாத்தி, 40. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், பெரிய கடைவீதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.கே., மார்க்கெட் பகுதியில் பணியில் இருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டார். ஆவணம் இல்லாத வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளார்.இதை, ஒருவர் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இந்த காட்சிகள் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றன. விசாரணையில், அவர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பெண் போலீசை ஆயுதப்படைக்கு மாற்றி, மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவிட்டார்.


latest tamil newsஇந்தியாவில் குற்றம் :
தாதாக்கள் வீடு பறிமுதல்
நொய்டா: உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் மாபியா கும்பல் தலைவர் சின்ராஜின் மருமகன்களான நவீன் பாட்டி மற்றும் பிரவீன் பாட்டி ஆகியோர் தாதாக்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக 1.90 கோடி ரூபாய் மதிப்புள்ள இரு குடியிருப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களது 2 கோடி ரூபாய் மதிப்புள்ள குடியிருப்பு, ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X