உயர் ஜாதியினரை குறிவைத்து களம் இறங்க சமாஜ்வாதி கட்சி திட்டம்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
லக்னோ : உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, உயர் ஜாதியினரின் ஓட்டுகளை குறிவைத்து களம் இறங்க சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.பா.ஜ., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உட்பட அனைத்து

லக்னோ : உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, உயர் ஜாதியினரின் ஓட்டுகளை குறிவைத்து களம் இறங்க சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது.



latest tamil news



உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.பா.ஜ., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உட்பட அனைத்து கட்சிகளும் இப்போதே களம் இறங்கி விட்டன. இந்நிலையில் பிராமணர் உள்ளிட்ட உயர் ஜாதியினர் ஓட்டுகளை கவர, தொடர் கூட்டங்களை நடத்த சமாஜ்வாதி கட்சி மேலிடம் திட்டம் தீட்டியுள்ளது. இந்நிலையில் பரசுராம் பீட நிர்வாகிகள், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


latest tamil news



இது குறித்து சமாஜ்வாதி கட்சி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறியதாவது:பா.ஜ., அரசில் பிராமணர்கள் உட்பட உயர் ஜாதியினர் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் ஆளும் பா.ஜ., மீது கோபமாகவும் இருக்கின்றனர். சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் தான் நியாயத்தை பெற முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியுள்ளது. எங்கள் கட்சியில் உள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களை வைத்து, மாநிலம் முழுதும் தொடர் பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
27-ஜூலை-202109:53:27 IST Report Abuse
sankaseshan Chandry has forgotten atrocities done by this fellow and his father. Has this fellow been rewarded with money for betrayal to his community?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X