சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மெரினாவில் குண்டு மிரட்டல் : கோவையில் ஒருவர் கைது

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை:'சென்னை மெரினாவில் வெடிகுண்டு வெடிக்கும்' என்று கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு, 08.30 மணிக்கு ஒருவர் போன் செய்தார். போனில் பேசிய நபர், 'எனக்கு குறிப்பிட்ட எண்ணிலிருந்து ஒருவர் அழைத்து, மெரினா கடற்கரையில் குண்டுவெடிக்கும் என, கூறுகிறார். உடனடியாக அதை தடுத்து
 மெரினாவில் குண்டு மிரட்டல் : கோவையில் ஒருவர் கைது

கோவை:'சென்னை மெரினாவில் வெடிகுண்டு வெடிக்கும்' என்று கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு, 08.30 மணிக்கு ஒருவர் போன் செய்தார். போனில் பேசிய நபர், 'எனக்கு குறிப்பிட்ட எண்ணிலிருந்து ஒருவர் அழைத்து, மெரினா கடற்கரையில் குண்டுவெடிக்கும் என, கூறுகிறார். உடனடியாக அதை தடுத்து நிறுத்துங்கள்' என, தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.இதேபோன்று தொடர்ந்து போன் செய்ததால் சந்தேகமடைந்த போலீசார் மோப்பநாய் உதவியுடன் மெரினாவில் தீவிர சோதனையிட்டனர். இறுதியில் புரளி என்பது உறுதியானது.கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் எண் மூலம் விசாரித்ததில், கோவை, குனியமுத்தூரை சேர்ந்த பீர் முகமது, 41 என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சென்னையில் இருந்து நேற்று கோவை வந்து பீர் முகமதுவை கைது செய்து அழைத்து சென்றனர்.இவர் இதற்கு முன்பு இதேபோன்று கோவை அரசு மருத்துவமனை, சர்ச், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடிக்கும் என, கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இதுபோன்று, 100 முறைக்கும் மேல் மிரட்டல் போன் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
27-ஜூலை-202118:11:14 IST Report Abuse
RaajaRaja Cholan வாயில வடை சுட்டிருக்கிறார் . இதனால் எத்தனை மக்களுக்கு கஷ்டம் , அறிவு இல்லாத ஜென்மம்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
27-ஜூலை-202109:38:19 IST Report Abuse
Girija கோவை யூனியன் பிரதேசமாக ஆவது வெகு தூரத்தில் இல்லை. கரும்புக்கடை, உக்கடம், குனியமுத்தூர் மிகவும் ஆபத்தான இடங்களாக மாறிவருகிறது. என் ஐ ஏ எப்போது வந்தாலும் இந்த இடங்களில் இருந்துதான் தீவிரவாதிகளை பிடிக்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X