பொது செய்தி

தமிழ்நாடு

'அவர்கள் இன்றி இனி ஒரு வேலை நடக்காது!'

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
'தமிழ் இளைஞர்கள் வேலைக்கே வர மாட்டேன் என்கின்றனர்; வட மாநில இளைஞர்களை அழைத்து வந்தே, பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது' என, திருப்பூரைச் சேர்ந்த, 'கிளாசிக் போலோ' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவராமன் மனம் நொந்து பேசிய காணொலி, பரபரவென பரவி வருகிறது. அதேசமயம், அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, 'பீஹாரிகளுக்கு மூளை குறைவு' என்று தெரிவித்திருப்பது,

'தமிழ் இளைஞர்கள் வேலைக்கே வர மாட்டேன் என்கின்றனர்; வட மாநில இளைஞர்களை அழைத்து வந்தே, பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது' என, திருப்பூரைச் சேர்ந்த, 'கிளாசிக் போலோ' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவராமன் மனம் நொந்து பேசிய காணொலி, பரபரவென பரவி வருகிறது. அதேசமயம், அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, 'பீஹாரிகளுக்கு மூளை குறைவு' என்று தெரிவித்திருப்பது, ஆச்சரியத்தை அளித்து இருக்கிறது.latest tamil news
'மேன்பவர் சப்ளையர்'


ஒருபக்கம், வேலைகளை செய்வதற்கு, தமிழ் இளைஞர்கள் தயாரில்லை என்ற நிலையில், வட மாநில இளைஞர்களை குறை சொல்வது என்ன நியாயம்; அவர்களும் இல்லையெனில், இங்கே தொழில்கள் திண்டாடிப் போகாதா என்று கேட்கின்றனர், பல்வேறு தொழிலக முதலாளிகள்.இதில் உண்மை நிலை என்ன என்பதை, தொழில் துறை ஆலோசகர் ஆர்.நரசிம்மன், நம்நாளிதழுக்கு அளித்த பேட்டி: 'கிளாசிக் போலோ' எம்.டி., சொன்னது, நுாற்றுக்கு நுாறு உண்மை. நானும் 1௦ ஆண்டுகளுக்கு மேலாக பார்த்து வருகிறேன்.

கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் பீஹார் மற்றும் வடகிழக்கு மாநில தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். 'கிளப்' ஒன்றில் பணியாற்றிய வடமாநில நபரிடம், ஒரு முதலாளி ஆட்கள் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். தன்னுடைய கிராமத்தில் இருந்து 10, 20 என்று இளைஞர்களை, திருப்பூருக்கு வரவழைத்தார். ஒரு கட்டத்துக்குப் பின், அங்கே கல்யாண மண்டபம் ஒன்றை வாடகைக்கு பிடித்து, அதில் ஆட்களை தங்க வைத்து உணவு கொடுத்து, பல்வேறு வேலைகளுக்கு ஆட்களை 'சப்ளை' செய்யத் துவங்கி விட்டார்.


latest tamil newsஇன்று தொழிலகங்களின் தேவைக்கேற்ப 100, 200 ஆட்களைக் கூட, அவரால் வழங்க முடியும். மிக வெற்றிகரமான 'மேன்பவர் சப்ளையர்' ஆகி விட்டார், அந்த முன்னாள் கிளப் ஊழியர். மிகவும் சிரமமான துறைகளில் கூட, வட மாநில தொழிலாளர்கள் வந்து விட்டனர்.


உழைப்பு அதிகம்


உதாரணமாக, ரசாயன ஆலைகள், கட்டுமான துறை, சாயத் தொழில் போன்ற இடங்களில், உதவியாளர்களாக வந்து சேருவர். படிப்படியாக தொழிலை கற்று முன்னேறி விடுவர். இன்று, திருப்பூர் பகுதியில், பலர் சொந்தமாகவே சிறு சிறு யூனிட்களை அமைத்து, தொழில்முனைவோராக மாறியுள்ளனர். அவர்களுடைய உழைப்பு மிக அதிகம்; உற்பத்தி திறன் மிக அதிகம்; ஈடுபாடும் மிக அதிகம்; கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பு, மிக மிக அதிகம்.

வெறுமனே சுத்தப்படுத்தும் வேலையை கொடுத்தாலும் கூட, மூலை முடுக்கெல்லாம் சுத்தப்படுத்தி, அவ்வளவு நேர்த்தியாக பணியாற்றுவர். தமிழ் இளைஞர்கள் நிலைமையே வேறாக இருக்கிறது. பல்வேறு புதிய தொழில்கள், தமிழகத்துக்கு வரப் போவதை யூகித்த, தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் ஒன்று, ஒரு தொழிற் பயிற்சி பள்ளியை துவங்கியது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு என்றே, ஐ.ஐ.எம்., ஆமாதாபாதில் இருந்து, இரண்டு இளைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.


உத்தரவாதம்


கிராமம் கிராமமாக போய், 10ம் வகுப்பு முடித்த மாணவர்களை தேடித் தேடி, இந்தத் தொழிற்பயிற்சி வகுப்பில், 100க்கு மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்தனர். உணவு, உறைவிடம் இலவசம் என்பதோடு, அவர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகையும் வழங்க உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.


latest tamil news
ஆச்சரியம்

வகுப்பு ஆரம்பித்த போது, வந்து சேர்ந்தது வெறும், 20 மாணவர்கள் தான். வீட்டுக்கு பக்கத்திலேயே வேலை கிடைத்தால் போதும் என்று, தமிழக இளைஞர்கள் நினைக்கின்றனர்.ஊரை விட்டு நகர மாட்டேன் என்கின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு, ரொம்ப அதிகமாகஇருக்கிறது. அதை நிறைவேற்றும் அளவுக்கு, நமது தொழில் துறை இல்லை. இதைப் பார்க்கும் போது, கே.என்.நேரு, எப்படி வட மாநில இளைஞர்களை பற்றி, அப்படியொரு விமர்சனம்செய்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் இனி ஒரு வேலை நடக்காது.இவ்வாறு நரசிம்மன் கூறினார்.

- நமது நிருபர்- -

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Athiri buthiri - Surat,இந்தியா
28-ஜூலை-202118:42:33 IST Report Abuse
Athiri buthiri மேய்க்கற வேலையை பழகிட்டா நாமலும் கிளாசிக் போலோ மாதிரி வட மாநிலத்தவர்களை மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம். தமிழர்களே முடிந்தவரை அனைவரும் தொழில் முனைவோர் ஆகுங்கள். Income Inequalityஐ வடமாநிலங்களைக் காட்டிலும் குறைப்போம். நம்ம படிச்ச படிப்புக்கு உண்டான வேலையை அடையும் வரை முழு ஈடுபாட்டுடன் முயற்சிப்போம். வெற்றி பெறுவோம்.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் எனது விருப்பத்துக்குரிய முடி திருத்துபவர் "ஷில்லாங்" கை சேர்ந்தவர் "கை தேர்ந்தவர்"
Rate this:
Cancel
Premanathan S - Cuddalore,இந்தியா
27-ஜூலை-202114:28:49 IST Report Abuse
Premanathan S அமைச்சர் பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். உடல் உழைப்பு அவருக்கு பழக்கம் இல்லை. அறிவு சார் உழைப்பு மட்டுமே அறிந்தவர். எனவே அப்படிப் பேசுவது ஆச்சரியம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X