பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக ஒலிம்பிக் வீராங்கனைகள் இருவருக்கு அரசு பணி வழங்கப்படும் ; அமைச்சர் மெய்யநாதன்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை, : ''ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள, தமிழக வீராங்கனைகள் இருவருக்கு, அவர்கள் தாயகம் திரும்பியதும், அரசு பணி வழங்கப்படும்,'' என, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.அவர் அளித்த பேட்டி: தங்கம் வெல்வார் தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்றுள்ள, வீரர்கள், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில், 'வென்று வா வீரர்களே' என்ற

சென்னை, : ''ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள, தமிழக வீராங்கனைகள் இருவருக்கு, அவர்கள் தாயகம் திரும்பியதும், அரசு பணி வழங்கப்படும்,'' என, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.latest tamil newsஅவர் அளித்த பேட்டி: தங்கம் வெல்வார் தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்றுள்ள, வீரர்கள், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில், 'வென்று வா வீரர்களே' என்ற பாடலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.இதில் வரலாற்றில் முதல் முறையாக, தமிழகத்தில் இருந்து, 11 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.

அவர்களுக்கு துணை நிற்கும் வகையில், உலகில், 77 நாடுகளில் வசிக்கும் தமிழர்களை, 'வென்று வா வீரர்களே' என்ற ஒற்றை வரியில் இணைத்து, அவர்களுக்கு துணை நிற்பது தான், இந்த பாடலின் நோக்கம்.அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டியில், அதிக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று, குறைந்தது, 25 பதக்கங்களை பெற வேண்டும் என்பது, முதல்வரின் தொலைநோக்கு திட்டம். அந்த வகையில், 'வென்று வா வீரர்களே' பாடல் வரிகளை, அனைவரும் பகிர வேண்டும்.


latest tamil newsஇப்பாடல் வரியை தயாரிக்க துணை நின்ற, விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலருக்கும், பாடலுக்கு இசை அமைத்து கொடுத்த யுவன்சங்கர் ராஜாவுக்கும், பாடலை தயாரித்து வழங்கிய, தமிழக கூடைப்பந்து கழகத்திற்கும் நன்றி.ஒலிம்பிக் போட்டியில், முதல் முறையாக, தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி, வாள்வீச்சு போட்டியில் பங்கேற்றார். முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இரண்டாவதுசுற்றில், உலகின் மூன்றாவது நிலையில் உள்ள வீராங்கனையுடன் மோதி, தோல்வி அடைந்தார்.

'தோல்வி குறித்து கவலை வேண்டாம். இது தொடக்கம் தான். அடுத்து வரும் ஒலிம்பிக்கில், பவானிதேவி தங்கம் வெல்வார். அவருக்கு அரசு துணை நிற்கும்' என, முதல்வர் தெரிவித்து உள்ளார். வறுமையான பின்னணிடேபிள் டென்னிஸ் போட்டியில், சரத்கமல் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். சத்யன், இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார். நேத்ரா குமணன், பாய்மர படகு போட்டியில் தகுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.அடுத்து வரும் போட்டிகளில், நம் வீரர்கள் வெற்றி பெற வேண்டும்.

தமிழகத்தில், நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட உள்ளது. அங்குள்ள, ஆறு வயது முதல், 14 வயது உள்ள விளையாட்டு ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள, தமிழக வீரர்கள், 11 பேரில், ஒன்பது பேர், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் உள்ளனர். மிகவும் வறுமையான பின்னணியில் இருந்து வந்த சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகியோருக்கு, போட்டி முடிந்து தாயகம் திரும்பியதும், முதல்வர் அரசு பணி வழங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
27-ஜூலை-202114:14:43 IST Report Abuse
vpurushothaman தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக ஒரு பல்கலைக் கழகம் இருப்பதாகப் படித்ததாக நினைவு. ஒலிம்பிக் அகெடெமி அமைத்தல் வரவேற்புக்குரியதே .
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூலை-202113:01:09 IST Report Abuse
Ganesh இதற்கு பதிலாக தமிழக வீரர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நேரடியாக இறுதிச்சுற்று வேண்டும் என ஒலிம்பிக் கமிட்டி யிடம் விண்ணப்பிக்கலாம். மக்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும்.கூட்டனி கட்சிகளும் துறை நிற்கும்.குழு ஒன்று அமைத்தால் திமுக ஆதரவாளர்கள் அனைவரும் போட்டியில் வாயில் பதக்கம் வேண்டும் என்று கூறுவர்
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
27-ஜூலை-202108:37:29 IST Report Abuse
N Annamalai this will increase moral of the players.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X