மக்களை தேடி மருத்துவ திட்டம் ஆகஸ்டில் துவக்கம்: அமைச்சர் சுப்பிரமணியன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவ திட்டம் ஆகஸ்டில் துவக்கம்: அமைச்சர் சுப்பிரமணியன்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (7)
Share
கிருஷ்ணகிரி : ''ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:மூன்றாவது அலையில் அதிகமாக பாதிக்கப்படலாம் என கூறப்படும் குழந்தைகள், சிகிச்சை பெறும்

கிருஷ்ணகிரி : ''ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.



latest tamil news



கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:மூன்றாவது அலையில் அதிகமாக பாதிக்கப்படலாம் என கூறப்படும் குழந்தைகள், சிகிச்சை பெறும் வகையில், 10 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி அல்லது தர்மபுரி மாவட்டத்தில், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் வரும்.


latest tamil news



ஆகஸ்டில் முதல்வரால் துவங்கப்படும். இதன் மூலம் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட தொற்றா நோய் பாதிப்புள்ளவர்கள் வீடுகளுக்கே சென்று, மருத்துவம் பார்க்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X