பொது செய்தி

தமிழ்நாடு

காலமெல்லாம் கதிகலங்க வைக்கும் உணவு கலப்படங்கள்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
மதுரை : உணவு கலப்படம் காலமெல்லாம் நடக்கும் ஒன்று தான். ஆனால் அது குறித்து நாம் அவ்வப்போது விழிப்புணர்வு பெறாவிட்டால்ஆரோக்கியத்தை கதிகலங்க வைத்து, கலப்படமாக்கி நோய்களின் பிடியில் சிக்கி தவிக்கவிடும்.பெரும்பாலும் அதிக லாப நோக்கத்துடன், ஓரளவு விலை உயர்ந்த உணவு பொருட்களில் கலப்படம் செய்கிறார்கள். அன்றாடம் உட்கொள்ளும் உணவு பொருட்களில் கலப்படங்களை வீட்டிலேயே

மதுரை : உணவு கலப்படம் காலமெல்லாம் நடக்கும் ஒன்று தான். ஆனால் அது குறித்து நாம் அவ்வப்போது விழிப்புணர்வு பெறாவிட்டால்ஆரோக்கியத்தை கதிகலங்க வைத்து, கலப்படமாக்கி நோய்களின் பிடியில் சிக்கி தவிக்கவிடும்.latest tamil newsபெரும்பாலும் அதிக லாப நோக்கத்துடன், ஓரளவு விலை உயர்ந்த உணவு பொருட்களில் கலப்படம் செய்கிறார்கள். அன்றாடம் உட்கொள்ளும் உணவு பொருட்களில் கலப்படங்களை வீட்டிலேயே எளிய பரிசோதனைகள் மூலம் கண்டறியும் முறை குறித்து மதுரை உணவுபாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறுகிறார்...


பாலில் வெள்ளை தடம்


பாலில் தண்ணீர் கலந்திருப்பதை கண்டறிய ஒரு சொட்டுப் பாலை பளபளப்பான சாய் தளத்தில் விட வேண்டும். கலப்படமில்லாத பால் அப்படியே நிற்கும் அல்லது மெல்ல வழிந்து வந்த இடத்தில் வெள்ளை தடம் இருந்தால் நீர் கலக்காத பால். நீர் கலந்த பாலை சாய் தளத்தில் விட்டதும் வழியும், தடம் இருக்காது.


டீத்துாளில் நல்ல மணம்


இரும்பு துாள் கலந்த டீத்துாளை கண்டறிய தட்டில் டீத்துாள் நிரப்பி மேலே காந்தம் வைத்து நகர்த்த வேண்டும். இரும்பு துாள் இருந்தால் காந்தத்தில் ஒட்டும். டீத்துாளை கண்ணாடி டம்ளரில் துாவி சுடு தண்ணீர் ஊற்றுங்கள். நல்ல டீத்துாள் நிறம் மாற 3 நிமிடங்கள் ஆகும். கலப்பட டீத்துாள் என்றால் 30 வினாடியில் மாறும்.


latest tamil news
உறையும் தேங்காய் எண்ணெய்


தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய் கலந்திருப்பதை கண்டறிய கண்ணாடி டம்ளரில்தேங்காய் எண்ணெய் ஊற்றி பிரிட்ஜ் பிரீசரில் வையுங்கள். கலப்படமில்லாத எண்ணெய் உறைந்திருக்கும். கலப்படம் இருந்தால் உறைந்தும், கலக்கப்பட்ட வேறு எண்ணெய் உறையாமல் இருக்கும்.


கரையாது சுத்தமான தேன்


கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கும் போது கரையாமல் தேங்கி நின்றால் அது சுத்தமான தேன். கரைந்தால் அதனுடன் சர்க்கரை கலந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.


தண்ணீரில் கரையும் சர்க்கரை


சர்க்கரை, வெல்லத்தில் 'சாக்பவுடர்' கலந்திருப்பதை கண்டறிய ஒரு ஸ்பூன் சர்க்கரையை ஒரு டம்ளர் நீரில் போடுங்கள். சிறிது நேரத்தில் உண்மையான சர்க்கரை கரைந்து விடும். 'சாக் பவுடர்' கலந்திருந்தால் அது டம்ளரின் அடியில் படிந்திருக்கும்.

மஞ்சள் துாளை கண்ணாடி டம்ளர் தண்ணீரில் கலக்கும் போது கீழிறங்கி வெளிர் மஞ்சள் திறத்தில் டம்ளரின் கீழே படிய வேண்டும். அடர்ந்த மஞ்சள் நிறத்தில் மிதந்தால் அது கலப்படமஞ்சள்.

நிறம் மாறாத தானியங்கள்
கேழ்வரகு, கோதுமை, சோளம் போன்ற தானியங்களை தண்ணீரில் போடும் போது அதில் செயற்கை நிறம் கலந்திருந்தால் தண்ணீரின் நிறம் மாறும். நிறம் மாறாமல் அப்படியே இருந்தால் அது தரமான தானியங்கள்.


மிதக்கும் மிளகாய் துாள், மிளகு


மிளகாய்த் துாளை தண்ணீரில் கலக்கும் போது மிதக்க வேண்டும். மரத்துாள் கலந்த மிளகாய் துாள் நீருக்கு அடியில் தேங்கும். மிளகில் பப்பாளி விதைகலந்திருப்பதை கண்டறிய மிளகை தண்ணீரில் போடுங்கள். பப்பாளி விதைகள் என்றால் தண்ணீரில் மிதக்கும். மிளகு என்றால்தண்ணீருக்கு அடியில் தங்கும்.


பச்சை நிற காய்கறி, பழங்கள்பச்சை மிளகாய், பட்டாணி உள்ளிட் பச்சை காய்கறி, பழங்களை நீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும். அப்போது பச்சை நிறம் நீரில் கலந்தால் அதில் கலப்படம் உள்ளது என அர்த்தம். நீரின் நிறம் மாறாமல் காய்கறியும் அப்படியே இருந்தால் இயற்கையானது.


latest tamil news
கலப்படமா புகார் அளிக்கலாம்


நாம் பாக்கெட் உணவு பொருட்கள் வாங்கும் போது ஒரு நிமிடம் ஒதுக்கி பாக்கெட்டில் பொருளின் பெயர், தயாரித்த தேதி, அதில் கலந்த பொருட்கள், நியூட்ரீஷியன் விவரம், பெஸ்ட் பிபோர் மற்றும் எக்ஸ்பியரி, எடை அளவு, பேக்கிங் கோட், பேட்ச் நம்பர், சைவமா அல்லது அசைவமா, தயாரிப்பு நாடு, ஊர், மாநிலம் ஆகிய தகவல்களை கவனிக்க வேண்டும். இதில் ஏதாவது முரண்பாடு அல்லது பயன்படுத்தும் போது கலப்படம் இருந்தால் உணவு பாதுகாப்பு துறையின் 94440 42322 வாட்ஸ் ஆப் எண், unnavupukar@gmail.com மெயிலில் புகார் அளிக்கலாம். உணவு சட்டம்,உரிமைகள் குறித்து அறிய www.fssai.gov.in என்ற இணையதளம் பார்க்கலாம்.


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
27-ஜூலை-202119:07:00 IST Report Abuse
W W இதுபோல் பன்னீரிலும் கலப்படம் எல்லா எண்ணெய்களிலும் கலப்படம் எந்த ப்ரண்டு எண்ணெய் அதிகம் விற்கிறதொ அதிலும் கலப்படம் டுபுழிக்கேட் .கலப்படம் செய்ப்பவர் மாட்டுவதில்லை அப்படி மாட்டுனாலும் சொற்ப பைன் கட்டி தப்பிவிடுகின்ற்னர் இதில் டீ யில் கலப்படம் சொல்ல வேண்டியதே இல்லை .இனியாவது கலப்படம் செய்வோரை ஷீர்ட்டான அரபு நாடுகளின் தண்டனை கொடுக்கப்பட்ட வேண்டும். கலப்படம் கொலை குற்றத்துக்கு சமம் .இதில் ஒரு மாற்றமும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து . .
Rate this:
Cancel
Moolpatra - Kabul,ஆப்கானிஸ்தான்
27-ஜூலை-202114:13:06 IST Report Abuse
Moolpatra எந்த மெயிலில் புகார் செய்யலாம் என்று தகவல் கொடுத்துள்ளீர்கள் ஆனால் அது ஜிமெயில் இதைப்போன்ற போலி ஜிமெயில் ஐ டி இன்னும் குறைந்தது ஐந்தாறு உருவாக்க முடியும் புரிகிறதா, ஏன் சொல்கிறேன் என்று ?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
27-ஜூலை-202114:04:13 IST Report Abuse
r.sundaram கலப்படத்துக்கு மரண தண்டனை கொடுத்தால்தான் கலப்படத்தை தவிர்க்க முடியும். அரசு செய்யுமா? எனது வீட்டில் நல்லண்ணை வாங்கி, விளக்கில் விடும்போது அதில் கடலை என்னை வாசனை வருகிறது, எப்படி தெரிய வில்லை. நல்லெண்ணையில் கடலை எண்ணையை கலப்படம் செய்ய முடியுமா? நல்ல என்னை லிட்டர் முன்னூறு ரூபாய்க்கு மேல், அனால் கடலை என்னை நூற்றி ஐம்பதுக்கு உள்ளே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X