அமித் ஷா வெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைக்கிறார்: ராகுல் கடும் விமர்சனம்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: 'வெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடுமையாக விமர்சித்து உள்ளார்.அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னையில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் அசாம் போலீசார் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேற்பட்டோர்

புதுடில்லி: 'வெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடுமையாக விமர்சித்து உள்ளார்.


latest tamil news



அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னையில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் அசாம் போலீசார் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரு மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைப்பேசியில் பேசி எல்லைப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.



latest tamil news



இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், 'மிசோரம், அசாம் இடையிலான எல்லைப் பிரச்னையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்காக நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த தேசத்தின் உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகிறது' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202107:09:49 IST Report Abuse
ராஜா சொல்லீட்டாருய்யா கௌதம புத்தரு... பேசி கேட்க வேண்டிய நிலைமை.
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-202117:01:59 IST Report Abuse
Easwar Kamal அமித் அண்ணாவை ஏதாவது சொன்ன உடனே 60 ஆண்டு ஆட்சின்னு ஏதாவது சொலி ப்ரிச்சநை திசை திருப்பிவிடுவதே இந்த சாங்கி கூட்டங்களின் வேலை. இப்போது என்ன ப்ரிச்சனை அதை இவரு சரி செயலாம் என்று யோசியுங்கள். இந்த அமித் என்றாவது இந்த லடாக் அல்லது காஷ்மீர் பக்கம் போய் இருப்பாரா? மோடி கூட பல தடவை சென்று உள்ளார். உள்துறை அமைச்சர் என்பவர் நாட்டின் எல்லா பக்கமும் சென்று வர வேண்டும். இப்போது ப்ரிச்சனை ஏற்பட்டு உள்ள இடத்துக்கும் போய் வர வேண்டும்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
27-ஜூலை-202116:08:42 IST Report Abuse
Duruvesan Moorkan and paavadai pulambal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X