பொது செய்தி

தமிழ்நாடு

9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்க ஆலோசனை: அமைச்சர் தகவல்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் பொது
School, ReOpen, Minister, AnbilMahesh, Tamilnadu, பள்ளி திறப்பு, பள்ளிக்கல்வித்துறை, அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் பொது முடக்கத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.


latest tamil news


தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களை கேட்டு பள்ளிகளை திறக்க அவர்கள் அனுமதித்தால் முதல்வர் அதற்கு சம்மதம் தெரிவிப்பார். அப்படி நிகழும் பட்சத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்த மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது பற்றி அப்போது அறிவிப்போம். இவ்வாறு, அன்பில் மகேஷ் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
27-ஜூலை-202121:11:43 IST Report Abuse
Rengaraj அமைச்சர் சார் வணக்கம் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட வழியில்லை அதனால் பள்ளி திறக்க வேண்டாம் பேருக்கு ஒரு மாசம் திறந்து பிறகு மூடுவீங்க தனியார் பள்ளி பெற்றோர்களிடம் கட்டணம் வசூல் பண்ண ஒரு காரணம் வேண்டாமா ? பெற்றோர்கள் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வர வரையிலும் பசங்க பத்திரமா வீட்டிலேயே கொரோனாவுக்கு பயந்து படிக்கிறாங்க அப்படின்னு நீங்க நம்பித்தான் ஆகணும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்று உருப்பட வழியில்லாத ஒரு முறையை கண்டுபிடிச்சாச்சு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஜாலியா பாதி நாள் போறாங்க போகாமலும் இருக்காங்க அவர்களையும் நீங்க தொந்தரவு பண்ண வேண்டாம். கல்வி எக்கேடு கெட்டும் போகட்டும் குழந்தைகள் உயிர் மிகவும் முக்கியம் படிக்கலேன்னாலும் நீங்க இந்த வருஷமும் ஆல் பாஸ் பண்ண வைக்க முடிவு பண்ணியிருப்பீர்கள். அதை நம்பி பெற்றோர்களும் இருக்காங்க பசங்களை வேலைக்கு அனுப்பி குடும்பத்தை நடத்தறாங்க யாரவது கல்வி தரம் அப்படின்னு கேட்டால் கொரோனா மேல பழி போட்டு நீங்க தப்பிக்கலாம். இல்லேன்னா போன வருஷம் இருந்த ஆட்சியை காரணம் காட்டலாம். கவலைப்பட வேண்டாம் அமைச்சரே
Rate this:
Cancel
mahendran - trichy,இந்தியா
27-ஜூலை-202118:04:52 IST Report Abuse
mahendran This is not the right time to .After seeing the third wave they can do it. they ed in last jan and Feb.Due to this the second wave started mainly from schools in last March.. How is it possible to sit with mask for eight hours'
Rate this:
Cancel
RGK - Dharapuram,இந்தியா
27-ஜூலை-202117:41:34 IST Report Abuse
RGK சார் டிலே பண்ணாதீங்க மூணாவது அலை வரட்டும் ..இன்னும் பொருளாதாரம் பாழப்போகட்டும் ... நீங்க டக்குனு முடிவு எடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X