அமித்ஷாவிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை: பழனிசாமி

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்தனர். அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் தனித்தனியே டில்லி வந்தனர். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த இருவரும், நேற்று
அமித்ஷா, பன்னீர்செல்வம், பழனிசாமி, இபிஎஸ், ஓபிஎஸ், பாஜ, அதிமுக,

புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்தனர்.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் தனித்தனியே டில்லி வந்தனர். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த இருவரும், நேற்று (ஜூலை -26) காலையில் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். 20 நிமிடங்களுக்கு மேலாக இந்தச் சந்திப்பு நீடித்தது.

பின்னர் பழனிசாமி கூறுகையில், ''தமிழகத்துக்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவும், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு பிரசாரம் செய்ததற்காக நன்றி தெரிவிக்கவும், பிரதமர் மோடியை சந்தித்தோம்,'' என தெரிவித்தார்.


latest tamil news



இந்நிலையில், இன்று பார்லிமென்ட் வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பன்னீர்செல்வமும், பழனிசாமியும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, மனோஜ் பாண்டியன், தம்பிதுரை, தளவாய் சுந்தரம், ரவீந்தரநாத் உள்ளிட்டோரும் பங்கேற்றதாக தெரிகிறது. தமிழகத்தின் அரசியல் சூழல், கட்சி சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், பழனிசாமி கூறுகையில், 'மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம். அமித்ஷாவுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. பிரதமர் மோடியுடன் என்ன பேசினோமோ அதைத்தான் பேசினோம்'. இவ்வாறு அவர் கூறினார்

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூலை-202123:31:51 IST Report Abuse
அப்புசாமி படத்துல இவிங்க ரெண்டு பேர்தான் கைதட்டுறாங்க. பின்னால இருக்குற அதிகாரிங்க எல்லாம் முக கவசத்துக்குப் பின் நமுட்டு சிரிப்பு. அமித்பாய் என்ன வெளக்கேத்துறாரோ? வெறுமனே கைதட்டவா போயிருப்பாங்க?
Rate this:
Cancel
27-ஜூலை-202123:31:50 IST Report Abuse
அப்புசாமி படத்துல இவங்க ரெண்டு பேர்தான் கைதட்டுறாங்க. பின்னால இருக்குற அதிகாரிங்க எல்லாம் முக கவசத்துக்குப் பின் நமுட்டு சிரிப்பு. அமித்பாய் என்ன வெளக்கேத்துறாரோ? வெறுமனே கைதட்டவா போயிருப்பாங்க?
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
27-ஜூலை-202123:03:46 IST Report Abuse
J. G. Muthuraj தமிழ்நாட்டின் பல கோரிக்கைகளை கொண்டு சென்ற முதலமைச்சருக்கு மோடிஜி 20 நிமிடங்கள்தான் கொடுத்தார் .... பழைய முதலமைச்சருக்கு 20 நிமிடங்களுக்கு மேல் நிகழும் சந்திப்பு.....மேலும் அமித் ஷா அவர்களோடு சிறப்பு சந்திப்பு.....இவர்கள் அரசியல் பேச வில்லையாம்.....அவர்கள் சொந்த வீடுகளில் நடக்கும் சமயலைப்பற்றியா பேசியிருப்பார்கள்?.....எடப்பாடியார் அவர்களே எங்களுக்கு ஏற்கனவே காதுகள் குத்தியாச்சி சார்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X