பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
புதுடில்லி: 'யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை, வறுமையின் காரணமாகவே பிச்சை எடுக்கின்றனர்' எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம், 'பிச்சை எடுப்பதை தடை விதிக்க முடியாது' என தெரிவித்துள்ளது.கோவிட் பரவலைத் தடுக்கும் விதமாக போக்குவரத்து சந்திப்புகளிலும், சந்தைகளிலும், பொது இடங்களிலும் பிச்சை எடுப்பதற்கு பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் தடை
SC, Refuses, Ban Begging, சுப்ரீம் கோர்ட், உச்ச நீதிமன்றம், பிச்சை, தடை, செய்ய முடியாது

புதுடில்லி: 'யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை, வறுமையின் காரணமாகவே பிச்சை எடுக்கின்றனர்' எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம், 'பிச்சை எடுப்பதை தடை விதிக்க முடியாது' என தெரிவித்துள்ளது.

கோவிட் பரவலைத் தடுக்கும் விதமாக போக்குவரத்து சந்திப்புகளிலும், சந்தைகளிலும், பொது இடங்களிலும் பிச்சை எடுப்பதற்கு பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் தடை விதிக்குமாறும், அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க உத்தரவிடுமாறும் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூலை 27) நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது


latest tamil news


மேலும் நீதிபதிகள் கூறியதாவது: யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. வறுமையின் காரணமாகவே பிச்சை எடுக்கின்றனர். பிச்சை எடுப்பதை உயர் வர்க்கத்தின் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதை நாங்கள் விரும்பவில்லை. பிச்சை எடுப்பதற்காக மக்கள் வீதிகளில் இறங்குவது அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் காட்டுகிறது. இது ஒரு சமூக, பொருளாதாரப் பிரச்னை. ஒரு உத்தரவால் இதை சரி செய்ய முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். மேலும் "கோவிட் விவகாரத்தில் பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே மருத்துவ வசதி பெற உரிமை இருக்கிறது," எனக்கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202107:22:06 IST Report Abuse
அப்புசாமி மக்களுக்கு 15 லட்சம் பிச்சை போடறேன்னு சொல்லி ஜெயிச்சாங்களே? செஞ்சாங்களா? கேட்டு சொல்லணும் யுவர் ஆனர்.
Rate this:
JSS - Nassau,பெர்முடா
30-ஜூலை-202107:43:49 IST Report Abuse
JSSஅந்த மாதிரி எல்லாம் சொல்லவில்லை. சும்மா கதை விடாதீர்கள். அந்த கதைகளை பூ சுற்றி கம்மலிட்டுகம்யூனிஸ்டுகள் செய்து வருகிறார்கள். நீங்கள் புதிதாக காதில் பூ சுற்றவேண்டாம். திமுக. காங்கிரஸ்....
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
28-ஜூலை-202104:29:55 IST Report Abuse
meenakshisundaram திமுக 'வாக்கு பிச்சை 'எடுப்பதால் இந்த தீர்ப்பினால் மிகுந்த மகிழ்வு அடைவார்கள் அதற்க்கு 'பிச்சை' போட்டவர்களும் திருப்தி அடையலாம்
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
28-ஜூலை-202101:43:15 IST Report Abuse
jagan தேர்தல் வோட்டுக்கு காசு வாங்கும் எல்லா குடிகளும் பிச்சை எடுத்தவையே. அப்போ தேர்தலை தடை பண்ணி RSS கிட்ட 20 வருஷம் ஒப்படைக்கலாமா? சுப்ரீம் கோர்ட்டையும் அவர்கள் கட்டுப்பாட்டில் விட்டு விட்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X