பொது செய்தி

தமிழ்நாடு

சேலம், கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில்,இன்று(ஜூலை 27) சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்,
கோவை, நீலகிரி, தேனி, கனமழை, சென்னை வானிலை மையம்

சென்னை: சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில்,


இன்று(ஜூலை 27)


சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி_ மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் வடக்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


நாளை

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய( கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி_ மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் பதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.


latest tamil news




மீனவர்களுக்கான எச்சரிக்கை



இன்று(ஜூலை 27)


தமிழகம், ஆந்திரா கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், வடகிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.


நாளை(ஜூலை 28)

மத்திய வங்ககடல், வடக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.


(ஜூலை 29)


மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.


ஜூலை 27 முதல் 31 வரை


தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளிலும், ஜூலை 29 முதல் 31 வரை கர்நாடக கடலோர பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கீ.மீ., வேகத்தில் வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில், புவியரசன் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
27-ஜூலை-202121:35:34 IST Report Abuse
Balaji கொங்கு செழித்தால் தமிழும் தேசியமும் தெய்வீகமும் வாழும்... அருமை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X