அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுகின்றனர்: அண்ணாமலை

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (81)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுவதாக கூறியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை பா.ஜ., முன்னேற்றி இருப்பதாகவும், திமுக.,வில் இதுபோல் இல்லாமல் சிலரை வளர விடுவதில்லை எனவும் கூறியுள்ளார்.சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு பா.ஜ., மாநிலத்
Tamilnadu, BJP, Annamalai, DMK, தமிழகம், பாஜக, அண்ணாமலை, திமுக, போலி சமூக நீதி

சென்னை: தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுவதாக கூறியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை பா.ஜ., முன்னேற்றி இருப்பதாகவும், திமுக.,வில் இதுபோல் இல்லாமல் சிலரை வளர விடுவதில்லை எனவும் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அப்துல்கலாம் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்; விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர். அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆவதை திமுக தடுத்துவிட்டது. அ.தி.மு.க - பா.ஜ., கூட்டணியில் இருக்கிறது. அதனால் பிரதமருடன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்தனர். அதற்கு உரிமை உண்டு. ஆனால், உட்கட்சி விவகாரத்தில் தலையீடு செய்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.


latest tamil news


முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி. இதை நீதிமன்றத்தில் எதிர் கொள்வார்கள். மீனவர் சட்ட மசோதாவில் குறைகள் இருந்தால் பா.ஜ., கவனத்தில் கொள்ளும். மீனவர்கள் கோரிக்கைக்காக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக கவர்னர் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை. தமிழக காங்கிரஸ் அரசியல் ரீதியாக இதுபோல் குற்றச்சாட்டுகளை வைக்கிறது. தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுகின்றனர். இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை முன்னேற்றி இருக்கிறோம். ஆனால் தி.மு.க.,வில் இதுபோல் இல்லை. சிலரை வளர விடுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed - Nagai,இந்தியா
28-ஜூலை-202102:15:44 IST Report Abuse
Mohammed காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக யாகாதிபத்தியம் ஒழிய வேண்டும். இவர்களை மக்கள் ஒழித்தால், திறமைவாய்ந்த அனைவருக்கும் நீதிகிடைக்கும். "திறமை-நீதி" தான் உண்மையான சமூக நீதி. சமூக திறமைக்கு உரிய இடம் இல்லையென்றால், சமூகநீதி என்ற வார்த்தையை பயன்படுத்திக்கொண்டு, ஓட்டுக்காக அநீதிதான் ஏகாதிபத்திய காங்கிரஸ் செய்தது. இது நிச்சயமாக தேச துரோகம்
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
28-ஜூலை-202101:46:09 IST Report Abuse
jagan ரெட்டை மடி வலை எல்லாத்தையும் அறுத்து எறியவேண்டும். கோரல் முதல் கடல் தரையில் உள்ள எல்லா உரினத்தையும் அழிக்கும் வலை. தமிழக மீனவர்கள் மட்டுமே உலகத்தில் இதை இன்னும் பாவிக்கிறார்கள்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூலை-202123:08:17 IST Report Abuse
தமிழவேல் திராவிஷக் கும்பல் கவர்னர்கிட்டே புகார்கள் குடுத்தபோதே, அதுக்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போ எதுக்கு ரெயிடு நடக்கணும் ? திரும்பவும் உங்க கும்பல்தான் ஜெயிக்கும்கிற தயிரியத்தில தானே புகார்களை, கண்டுக்காம விட்டீங்க ? இப்போ பாரு, ரெண்டு தலையும் கதறிக்கிட்டு டெல்லிக்கு ஓடுது. // தமிழக கவர்னர் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை. //
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X