பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது: ஜனாதிபதி

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஸ்ரீநகர்: '' காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது'', என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.காஷ்மீர் பல்கலையில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் உரையாற்றியதாவது: அனைத்து வேறுபாடுகளையும் சரிசெய்யும் திறனையும், குடிமக்களின் சிறந்த திறனை வெளிப்படுத்தும் திறனையும் ஜனநாயகம் கொண்டுள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். இதனை காஷ்மீர் ஏற்கனவே
kashmir, President, Ramnathkovind, violence, காஷ்மீர், கலாசாரம், வன்முறை, ஜனாதிபதி, ராம்நாத், ராம்நாத்கோவிந்த்

ஸ்ரீநகர்: '' காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது'', என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

காஷ்மீர் பல்கலையில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் உரையாற்றியதாவது: அனைத்து வேறுபாடுகளையும் சரிசெய்யும் திறனையும், குடிமக்களின் சிறந்த திறனை வெளிப்படுத்தும் திறனையும் ஜனநாயகம் கொண்டுள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். இதனை காஷ்மீர் ஏற்கனவே உணர்ந்துள்ளது.

காஷ்மீரின் அமைதியான வாழ்க்கை உடைக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. காஷ்மீரின் ஒரு அங்கமாக வன்முறை இருந்ததில்லை. ஆனால், தற்போது தினமும் நடக்கும் நிகழ்வாக மாறிவிட்டது. காஷ்மீர் கலாசாரத்திற்கு, வன்முறை விரோதமானது. இந்த வன்முறை, தற்காலிகமானது தான். உடலில் புகும் வைரசை அழிப்பது போல், வன்முறையை அழிக்க வேண்டும். மாநிலத்தில் இருந்து வன்முறையை அகற்ற வேண்டும். காஷ்மீர் இழந்த பெருமையை பெற புதிய துவக்கமும், முயற்சிகளும் துவங்கி உள்ளது.


latest tamil news


வேதகாலத்தில், சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை காஷ்மீர் ஒரு சேர வழங்கியதை அனைவரும் அறிய வேண்டும். தங்களின் வளமான பாரம்பரியங்களை இளம் தலைமுறையினர் கற்று கொள்ள வேண்டும். இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு நம்பிக்கையின் கலங்கரையாக காஷ்மீர் வருகிறது என்பதை அனைவரும் அறிய வேண்டும். காஷ்மீரின் கலாசார மற்றும் ஆன்மீக செல்வாக்கு இந்தியா முழுவதும் முத்திரை பதித்து உள்ளது. இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூலை-202120:53:32 IST Report Abuse
அப்புசாமி வேத காலம்.... அப்போ அங்கே இருந்தவர்கள் காஷ்மீரி பண்டிட்கள். இப்போ இருப்பது? மூர்கள்.
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
27-ஜூலை-202116:08:38 IST Report Abuse
Sidhaarth அஸ்ஸாமும் மிசோரமுமே போர் புரியுது ஜனாதிபதி அய்யா ..நல்ல முன்னேற்றம்.
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
27-ஜூலை-202115:24:44 IST Report Abuse
Nesan வன்முறை காஷ்மீர் கலாசாரத்திற்கு மட்டும் விரோதமானது இல்லை. வன்முறை மனித குலத்திற்கே விரோதமானது. எல்லா நாட்டிற்கும், உலகிற்கும் வன்முறை கொடியது, கோரமானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X