காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது: ஜனாதிபதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது: ஜனாதிபதி

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (3)
Share
ஸ்ரீநகர்: '' காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது'', என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.காஷ்மீர் பல்கலையில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் உரையாற்றியதாவது: அனைத்து வேறுபாடுகளையும் சரிசெய்யும் திறனையும், குடிமக்களின் சிறந்த திறனை வெளிப்படுத்தும் திறனையும் ஜனநாயகம் கொண்டுள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். இதனை காஷ்மீர் ஏற்கனவே
kashmir, President, Ramnathkovind, violence, காஷ்மீர், கலாசாரம், வன்முறை, ஜனாதிபதி, ராம்நாத், ராம்நாத்கோவிந்த்

ஸ்ரீநகர்: '' காஷ்மீர் கலாசாரத்திற்கு வன்முறை விரோதமானது'', என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

காஷ்மீர் பல்கலையில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் உரையாற்றியதாவது: அனைத்து வேறுபாடுகளையும் சரிசெய்யும் திறனையும், குடிமக்களின் சிறந்த திறனை வெளிப்படுத்தும் திறனையும் ஜனநாயகம் கொண்டுள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். இதனை காஷ்மீர் ஏற்கனவே உணர்ந்துள்ளது.

காஷ்மீரின் அமைதியான வாழ்க்கை உடைக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. காஷ்மீரின் ஒரு அங்கமாக வன்முறை இருந்ததில்லை. ஆனால், தற்போது தினமும் நடக்கும் நிகழ்வாக மாறிவிட்டது. காஷ்மீர் கலாசாரத்திற்கு, வன்முறை விரோதமானது. இந்த வன்முறை, தற்காலிகமானது தான். உடலில் புகும் வைரசை அழிப்பது போல், வன்முறையை அழிக்க வேண்டும். மாநிலத்தில் இருந்து வன்முறையை அகற்ற வேண்டும். காஷ்மீர் இழந்த பெருமையை பெற புதிய துவக்கமும், முயற்சிகளும் துவங்கி உள்ளது.


latest tamil news


வேதகாலத்தில், சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை காஷ்மீர் ஒரு சேர வழங்கியதை அனைவரும் அறிய வேண்டும். தங்களின் வளமான பாரம்பரியங்களை இளம் தலைமுறையினர் கற்று கொள்ள வேண்டும். இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு நம்பிக்கையின் கலங்கரையாக காஷ்மீர் வருகிறது என்பதை அனைவரும் அறிய வேண்டும். காஷ்மீரின் கலாசார மற்றும் ஆன்மீக செல்வாக்கு இந்தியா முழுவதும் முத்திரை பதித்து உள்ளது. இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X