பொது செய்தி

இந்தியா

உத்தரகண்டில் குறைந்தது கோவிட் பாதிப்பு: ஆகஸ்ட் முதல் பள்ளிகள் திறக்க முடிவு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட்டில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.கோவிட் வைரஸ் பெருந்தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. முதல் இரண்டு அலைகளை எதிர்கொண்ட நிலையில் மூன்றாம் அலையும் வரும் என, நிபுணர்கள் கணித்திருப்பதால் பள்ளிகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட்டில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.



latest tamil news



கோவிட் வைரஸ் பெருந்தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. முதல் இரண்டு அலைகளை எதிர்கொண்ட நிலையில் மூன்றாம் அலையும் வரும் என, நிபுணர்கள் கணித்திருப்பதால் பள்ளிகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.


latest tamil news



இந்நிலையில் உத்தரகண்டில் கோவிட் பரவல் குறைந்துள்ள நிலையில் வரும் ஆகஸ்ட்டில், 6 முதல் பிளஸ்2 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பீஹார், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் பள்ளிகள் திறப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் August 1 falls on Sunday
Rate this:
SANKAR - ,
27-ஜூலை-202116:36:40 IST Report Abuse
SANKARNews just says AUGUST and NOT August 1...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X