பொது செய்தி

இந்தியா

3 ஆண்டுகளில் 5,569 கைதிகள் உயிரிழப்பு: மத்திய இணையமைச்சர் தகவல்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், போலீஸ் காவலில் இருக்கும் போது பலியான கைதிகள் குறித்த விவரங்களை கேட்ட எம்.பி.,க்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில் தெரிவித்து உள்ளதாவது: கடந்த 2018 முதல் 2021ல் தற்போது வரை காவலில் இருந்த 5,569 கைதிகள் உயிரிழந்து உள்ளனர். அதில்,

புதுடில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், போலீஸ் காவலில் இருக்கும் போது பலியான கைதிகள் குறித்த விவரங்களை கேட்ட எம்.பி.,க்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



கடந்த 2018 முதல் 2021ல் தற்போது வரை காவலில் இருந்த 5,569 கைதிகள் உயிரிழந்து உள்ளனர். அதில், நீதிமன்றக் காவலில் 5,221 பேரும், போலீஸ் காவலில் 348 பேரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 2018 - 19 வரை 1,933 கைதிகளும், 2019 - 20 வரை 1,696 கைதிகளும் 2020 முதல் தற்போது வரை 1,940 கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.




latest tamil news




முதலிடத்தில் உ.பி.,

இந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,318 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதில், போலீஸ் காவலில் 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 232 கைதிகள் உயிரிழந்து உள்ளனர். அதில், போலீஸ் காவலில் 25 பேர் பலியாகி உள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஜூலை-202120:08:45 IST Report Abuse
Vena Suna எதனால் உயிர் இழந்துள்ளனர்? தொற்று நோயா?
Rate this:
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
27-ஜூலை-202116:45:41 IST Report Abuse
ராஜேஷ் இதில் அப்பாவிகள் பலர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X