காங்கிரஸ் உட்கட்சி மோதல் அதிகரிப்பு: சட்டசபையில் இருந்து அமைச்சர் வெளிநடப்பு| Dinamalar

காங்கிரஸ் உட்கட்சி மோதல் அதிகரிப்பு: சட்டசபையில் இருந்து அமைச்சர் வெளிநடப்பு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (2)
Share
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், காங்கிரசில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. தனது கட்சி எம்.எல்.ஏ., தெரிவித்த குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார அமைச்சர் டிஎஸ் தியோ சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரசில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல்
காங்கிரஸ், உட்கட்சி மோதல், அதிகரிப்பு, சட்டசபை, அமைச்சர், வெளிநடப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், காங்கிரசில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. தனது கட்சி எம்.எல்.ஏ., தெரிவித்த குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார அமைச்சர் டிஎஸ் தியோ சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரசில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் டில்லி சென்று மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் பதவியில் இருந்து பாகேல் மாற்றப்படுவார் என யூகங்கள் கிளம்பி உள்ளது.


latest tamil news



இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரிஹஸ்பதி சிங் கூறியதாவது: நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க எனது ஆதரவாளர்களுடன் காரில் சென்ற போது, சிங் தியோவின் உறவினர் ஒருவர், மற்றொரு காரில் விரட்டி வந்து கார்களின் சாவியை பிடுங்கியதுடன் அடித்து சேதப்படுத்தினார். நான் முன்னரே அங்கிருந்து சென்றுவிட்டதால், நான் தப்பித்தேன். 4 அல்லது 5 எம்.எல்.ஏ.,க்களை கொன்று விட்டால், அதன் மூலம் நல்ல வாய்ப்பு கிடைத்து முதல்வராகலாம் என தியோ நினைக்கலாம். என்னை கொலை செய்துவிடுவார்கள் என அச்சப்படுகிறேன். கடந்த மாதம் பத்திரிகையாளர் சந்திப்பில், அடுத்த முதல்வர் குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என தெரிவித்தேன். அது முதல், எனது அழைப்புகளை தியோ ஏற்பது இல்லை. அவரது ஆதரவாளர்கள் எனக்கு எதிராக சதி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. சட்டசபையில் இருந்து, அமைச்சர் தியோ வெளிநடப்பு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், என் மீதான பிர்ஹஸ்பதி சிங்கின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடும் வரை அல்லது அறிக்கை வெளியிடும் வரை, கூட்டத்தொடரில் பங்கேற்பது சரியாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X