பெகாஸஸ் விவகாரம்: பார்லி.,யில் விவாதிக்க என்ன பயம்? திக்விஜய் சிங் கேள்வி| Dinamalar

பெகாஸஸ் விவகாரம்: பார்லி.,யில் விவாதிக்க என்ன பயம்? திக்விஜய் சிங் கேள்வி

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (12)
Share
புதுடில்லி: 'பெகாஸஸ் விவகாரத்தை பார்லிமென்டில் விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பயப்படுவது ஏன்' என, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.இஸ்ரேலின் உளவு மென்பொருளான பெகாஸஸ் மூலம் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

புதுடில்லி: 'பெகாஸஸ் விவகாரத்தை பார்லிமென்டில் விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பயப்படுவது ஏன்' என, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.



latest tamil news




இஸ்ரேலின் உளவு மென்பொருளான பெகாஸஸ் மூலம் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.



latest tamil news



இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பார்லிமென்ட் உறுப்பினருமான திக்விஜய் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், 'பார்லிமென்டில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பயப்படுவது ஏன்? உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக ஒருவரை சட்டப்பூர்வமாகக் கண்காணிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் என்.எஸ்.ஓ., நிறுவனம் மற்றும் இஸ்ரேலுக்கு இந்தியர்களின் தகவல்களை வழங்க யாரும் அரசுக்கு அனுமதி வழங்கவில்லை' எனப் பதிவிட்டு உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X