பொது செய்தி

இந்தியா

இந்திய-சீன எல்லை பிரச்னை குறித்து அமெரிக்க துணை அமைச்சருடன் விவாதம்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: சீனாவும் அமெரிக்காவும் கடந்த சில ஆண்டுகளாக தொடர் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வெண்டி ஷெர்மன், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ உடன் சீனாவின் டியான்ஜின் மாகாணத்தில் ஓர் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டார். கீரியும் பாம்பும்போல இருக்கும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள
US, Red Cards, China, Xinjiang, Tibet, Repression, Hong Kong

புதுடில்லி: சீனாவும் அமெரிக்காவும் கடந்த சில ஆண்டுகளாக தொடர் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வெண்டி ஷெர்மன், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ உடன் சீனாவின் டியான்ஜின் மாகாணத்தில் ஓர் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கீரியும் பாம்பும்போல இருக்கும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது. இவர்களது இந்த சந்திப்பு தற்போது உலக கவனம் பெற்றுவருகிறது. உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை சமாதானமாகப் பேசுவது ஓர் அரிய நிகழ்வு.


latest tamil news


இந்த கூட்டத்தில் ஹாங்காங் விவகாரம், ஜின்ஜியாங் பழங்குடியினர் விவகாரம், தைவான் ஆக்கிரமிப்பு, திபெத் சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இச்சந்திப்பை அடுத்து வெண்டி ஷெர்மன் டில்லிக்கு வருகை தர உள்ளார். சீன-இந்திய எல்லை ராணுவ மோதல் விவகாரம் குறித்து அவர் மத்திய அமைச்சர்களுடன் விரிவாக உரையாற்ற உள்ளார். இவர்களது இந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதம் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-202106:19:58 IST Report Abuse
Akash Give Akasi Chen to China in return for peace...this will be the advise...what else?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூலை-202118:57:41 IST Report Abuse
தமிழவேல் இந்த மீட்டிங் போதுதான் இந்தியா, பெகாசஸ் உளவு செயலி பயன் படுத்தியதாக உலக அளவில் பேசப்படுகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X