பிரதமர் மோடியுடன் மே.வங்க முதல்வர் மம்தா சந்திப்பு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: டில்லிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 3 நாள் பயணமாக டில்லி சென்றுள்ள நிலையில் இன்று (ஜூலை 27) பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேற்கு வங்கத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள், மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து
MamataBanerjee, Meets, PMModi, மம்தா, பிரதமர், மோடி, சந்திப்பு

புதுடில்லி: டில்லிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 3 நாள் பயணமாக டில்லி சென்றுள்ள நிலையில் இன்று (ஜூலை 27) பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேற்கு வங்கத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள், மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மம்தா ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

சந்திப்பிற்கு பிறகு மம்தா கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கோவிட் விவகாரம், கூடுதல் தடுப்பூசிகள், மற்றும் மருத்துவத்துறை குறித்து ஆலோசித்தோம். மாநிலத்தின் பெயர் மாற்றம் குறித்து நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பிரச்னை குறித்து எழுப்பினேன். அது குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்தார். பெகாசஸ் விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும். உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ,' என்றார்.


latest tamil news


இதனைத்தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பார்லி குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் திரிணமுல் எம்.பி.,களுடன் நாளை காலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஜூலை-202123:45:32 IST Report Abuse
Vena Suna மம்தா: போன முறை மாம்பழம் கொடுத்தேன்.நன்றாக இருந்ததா? மோடி: நான் சாப்பிடாத மாம்பழமா?எனது நாய்களுக்கு போட்டேன்...அவைகளும் சாப்பிடவில்லை நீங்கள் கொடுத்தது என்பதால்.
Rate this:
Cancel
Balasubramanyan - Chennai,இந்தியா
27-ஜூலை-202122:36:31 IST Report Abuse
Balasubramanyan வி மம்தா அம்மாவை மோடி வாசலில் வந்து வரவேறற.எதிர்கால பிரதம மந்திரி (எப்போ ) காக்கவைக்கப்பட்டாரா.
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
27-ஜூலை-202121:26:46 IST Report Abuse
Nagercoil Suresh மோடிஜி என்னை நம்புங்கள் நான் இருக்கும் வரை முன்புபோல் எதிர்க்கட்சியை கூட்டுசேர விடமாட்டேன் என வழக்கம்போல் கூறி இருப்பார்...மம்தாவிற்கு நடிகர் திலகி பட்டம் கொடுக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X