பொது செய்தி

இந்தியா

தொற்று ஏற்பட்டாலும் 98% உயிரை காப்பாற்றும் தடுப்பூசிகள்: மத்திய அரசு

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புது டில்லி: பண்டிகை காலம் வர இருப்பதால் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, தடுப்பூசி போட்டிருந்தால் தொற்று ஏற்பட்டாலும் 98% வரை உயிரைக் காப்பாற்ற முடியும் என்றது.நிடி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட ராணுவ மருத்துவமனையை

புது டில்லி: பண்டிகை காலம் வர இருப்பதால் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, தடுப்பூசி போட்டிருந்தால் தொற்று ஏற்பட்டாலும் 98% வரை உயிரைக் காப்பாற்ற முடியும் என்றது.latest tamil news
நிடி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட ராணுவ மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் என 15 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

டெல்டா வகை வைரஸால் ஏற்பட்ட 2-ம் அலையின் போது அவர்களுக்கு தொற்று பாதிப்பு 93% குறைவாக இருந்தது. அதே போல் இறப்பு விகிதமும் 98% குறைந்தது தெரியவந்தது. எந்தவொரு தடுப்பூசிக்கும் 100 சதவிகித உத்தரவாதம் இல்லை என்றாலும், தீவிர நோய்க்கான வாய்ப்பு கிட்டத்தட்ட நீக்கப்படுவதை காட்டுகிறது. இறப்பும் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிறது.


latest tamil newsதொற்றுநோய் முடிவடையவில்லை. நாம் கூட சோர்ந்து போகலாம். ஆனால் வைரஸ் சோர்ந்து போகாது. இது நமக்கான எச்சரிக்கை. ஏராளமான வைரஸ் உருவாகின்றன. எதிர்ப்பாற்றல் குறைந்த மக்கள் இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளன. தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும். கூட்டங்களுடன் சேர வேண்டாம். பள்ளிகள் திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம். என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriniv - India,இந்தியா
28-ஜூலை-202108:00:37 IST Report Abuse
Sriniv The data given is for Covishield. Is Covaxin less effective ? Many countries are still not recognizing Covaxin. So is Covaxin not fully protecting against Covid ? Can someone please clarify if those who have taken Covaxin are at a greater risk of getting infected ?
Rate this:
Cancel
Sriniv - India,இந்தியா
28-ஜூலை-202107:57:48 IST Report Abuse
Sriniv PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
27-ஜூலை-202120:47:11 IST Report Abuse
அப்புசாமி சரிங்க. யாரும் வெளியே போக மாட்டோம். வேலை வெட்டி இல்லாம வீட்டிலேயே முடங்கி இருக்கோம். எசமானுக்கு சுளையா சம்பளம், அகவிலைப் படி எல்லாம் கிடைச்சு சுபிட்சமா இருக்கீரா? இல்கேன்னா, எங்க வங்கிக் கணக்கிலிருந்து 5, 10 உருவிக்கோங்க. நீங்க நல்லா இருக்கணும். அதுதான் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X