விவசாய நிலத்தில் திடீர் பள்ளம்: பண்டைய கால சுரங்கமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலத்தில் திடீர் பள்ளம்: பண்டைய கால சுரங்கமா?

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (5)
Share
ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை, கிளாக்காடு மலை கிராமத்தில், விவசாயி துரைசாமி, தனது நிலத்தை டிராக்டரில் உழவு செய்துள்ளார். அப்போது, ஓரிடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இவை, 10 அடி ஆழத்துக்கு மேல் பெரிய அளவில் உள்ளதால், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா, தாசில்தார் வரதராஜ் உள்ளிட்ட

ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை, கிளாக்காடு மலை கிராமத்தில், விவசாயி துரைசாமி, தனது நிலத்தை டிராக்டரில் உழவு செய்துள்ளார். அப்போது, ஓரிடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.



latest tamil news



இவை, 10 அடி ஆழத்துக்கு மேல் பெரிய அளவில் உள்ளதால், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா, தாசில்தார் வரதராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.


latest tamil news



தானிய கிடங்கு அல்லது பண்டைய கால சுரங்கம் போல் இருந்ததால், தொல்லியல் துறைக்கு தகவல் அளித்தனர். நாளை, திருச்சியில் இருந்து, தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், அப்பகுதியில் வேலி அமைத்து, வருவாய்த்துறை மற்றும் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X