சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகனை சுத்தியால் தாக்கி கொலை செய்த தந்தை கைது

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:கோவையில், பணம் கேட்டு தகராறு செய்த மகனை, சுத்தியால் தாக்கி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.கோவை, பேரூர் செட்டிபாளையம், ஜி வி எல் நகரை சேர்ந்தவர் சபரிநாத், 34. இவர் பேரூர் செட்டிபாளையத்தில், வாடகை கடையில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக ஹோட்டலுக்கு வாடகை தராததால், கட்டட உரிமையாளர் முத்துக்குமார், ஹோட்டலின் முன் இருந்த தகர
 மகனை சுத்தியால் தாக்கி கொலை செய்த தந்தை கைது

தொண்டாமுத்தூர்:கோவையில், பணம் கேட்டு தகராறு செய்த மகனை, சுத்தியால் தாக்கி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கோவை, பேரூர் செட்டிபாளையம், ஜி வி எல் நகரை சேர்ந்தவர் சபரிநாத், 34. இவர் பேரூர் செட்டிபாளையத்தில், வாடகை கடையில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக ஹோட்டலுக்கு வாடகை தராததால், கட்டட உரிமையாளர் முத்துக்குமார், ஹோட்டலின் முன் இருந்த தகர சீட்களை அகற்றி உள்ளார்.
இதனால், வாடகை கொடுக்க பணம் வேண்டும் என கேட்ட சபரிநாத், தனது தாய் அமுதாவையும், தந்தை பாக்கியநாதனையும், திட்டி, தாக்கியுள்ளார். இதில், பாக்கியநாதனுக்கு காயம் ஏற்பட்டது. கோபமடைந்த பாக்கியநாதன், அருகிலிருந்த சுத்தியை எடுத்து, மகன் சபரிநாத்தின் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சபரிநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, பாக்கியநாதன், பேரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தனது மகனை தான் சுத்தியால் தாக்கியதில், மயங்கிகிடப்பதாகக்கூறி சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சபரிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பேரூர் போலீசார், தந்தை பாக்கியநாதனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X