பசவராஜ் பொம்மை கர்நாடகா முதல்வராகிறார் | Dinamalar

பசவராஜ் பொம்மை கர்நாடகா முதல்வராகிறார்

Updated : ஜூலை 27, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (7)
Share
பெங்களூரு :கர்நாடகா முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று தேர்வு செய்யப்பட்டார் . 224 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள கர்நாடகா சட்டசபைக்கு, 2018ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்கவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக குமாரசாமி
 BJP likely to announce new Karnataka CM today after party MLAs meet, Basavaraj Bommai பசவராஜ் பொம்மை கர்நாடகா  முதல்வராகிறார்   top contender

பெங்களூரு :கர்நாடகா முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று தேர்வு செய்யப்பட்டார் .


224 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள கர்நாடகா சட்டசபைக்கு, 2018ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்கவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். இவரது ஆட்சி ஓராண்டு கூட நீடிக்கவில்லை.

2019ல் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.வுக்கு தாவியதைடுத்து முதல்வராக 76 வயது எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்தது. எனினும் 75 வயதான யாருக்கும் கட்சி அல்லது ஆட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்ற பா.ஜ., கொள்கை முடிவை ஏற்று எடியூரப்பா நேற்று முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்;latest tamil newsஇந் நிலையில், இன்று பா.ஜ. சட்டசபை பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது.. இதில் கர்நாடகா பா.ஜ. மேலிட பார்வையாளர்களான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


யார் இந்த பசவராஜ் பொம்மை


மறைந்த முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மை மகன் தான் பசவராஜ் பொம்மை, 61. முன்னர் ஜனதா தள கட்சியில் இருந்தார். 2008-ல் பா.ஜ.வில் இணைந்தார். தற்போது கர்நாடகா உள்துறை அமைச்சராக உள்ளார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X