சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஏதோ ஒரு திறமை இருக்கு!

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
ஏதோ ஒரு திறமை இருக்கு!'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது, இவர் விஷயத்தில் உண்மையாகி விட்டது' என, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குரைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர் பா.ஜ., மூத்த தலைவர்கள். அனுராக் சிங் தாக்குர் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர். முன்னாள் முதல்வர் பிரேம் குமார்

 அக்கம் பக்கம்


ஏதோ ஒரு திறமை இருக்கு!



'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது, இவர் விஷயத்தில் உண்மையாகி விட்டது' என, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குரைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர் பா.ஜ., மூத்த தலைவர்கள்.
அனுராக் சிங் தாக்குர் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர். முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலின் மகன். தந்தை முதல்வர் பதவியில் இருந்தபோதே அனுராக், அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டார்.இவரது வேகமான செயல்பாடுகளைப் பார்த்து, பா.ஜ., மேலிடம், கட்சியின் அகில இந்திய இளைஞர் அணித் தலைவராக நியமித்தது. இதில் பாராட்டுகளை குவித்ததால், நிதித்துறை இணை அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இணை அமைச்சர் பதவியிலும் அனுராக் அசத்தினார். இதற்கு பரிசாக சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு தகவல் ஒலிபரப்பு துறையின் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அனுராகின் அசுர வளர்ச்சியைப் பார்த்து, பா.ஜ., மூத்த தலைவர்களே மிரண்டு போயுள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் அரசியலில் மேலும் பல உயரத்தை தொடுவார் என அனைவரும் பேசுகின்றனர். அனுராகோ இந்த புகழ்ச்சி மழைக்கு எல்லாம் மயங்காமல் தன் வேலையை பொறுப்பாக செய்து வருகிறார். 'இந்த பையனிடம் ஏதோ ஒரு திறமை இருக்கு; அதனால் தான் இந்த அசுர வளர்ச்சி...' என்கின்றனர் மூத்த மத்திய அமைச்சர்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X