சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அ.தி.மு.க.,வினர் உஷாராக இருக்கணும்!

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அ.தி.மு.க.,வினர் உஷாராக இருக்கணும்!கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என, பழனிசாமி, பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்ததால் தான், நான் ஒதுங்கியிருந்தேன்... ஆனால் கட்சி தோற்று விட்டது. எனவே அ.தி.மு.க.,வை மீண்டும் பழைய பொலிவுடன் திகழ வைக்க, நான் அரசியலுக்கு வருகிறேன்' என சசிகலா


அ.தி.மு.க.,வினர் உஷாராக இருக்கணும்!கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என, பழனிசாமி, பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்ததால் தான், நான் ஒதுங்கியிருந்தேன்... ஆனால் கட்சி தோற்று விட்டது. எனவே அ.தி.மு.க.,வை மீண்டும் பழைய பொலிவுடன் திகழ வைக்க, நான் அரசியலுக்கு வருகிறேன்' என
சசிகலா 'உதார்' விடுகிறார்.இவர் தன்னை இன்னொரு ஜெயலலிதாவாகவே எண்ணி கொண்டிருக்கிறார் போலிக்கிறது.சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டும், பல பொதுக்கூட்டங்களில் பேசியும், பம்பரமாக சுழன்று கட்சி பணியாற்றி அ.தி.மு.க.,வை வளர்த்தது போல ஒரு நினைப்பு அவருக்கு.தன்னை 'தியாக தலைவி' என அழைத்து கொள்ளும் சசிகலா, அப்படி என்ன தியாகம் செய்தார் என்பதை சொல்ல வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சியில், 'மன்னார்குடி குடும்பம்' வாங்கி குவித்த சொத்துக்களை காப்பதற்காக, இப்போது அரசியல் நாடகம் நடத்துகிறார்.ஜெயலலிதா மருத்துவமனையில் மரணிக்கும் வரை இருந்த 75 நாட்களும், அவர் அருகில் இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மரண மர்ம முடிச்சு இன்னமும் அவிழவில்லை.ஜெயலலிதா மரணத்திற்கு பின், கட்சியை கைப்பற்றி, அசுர வேகத்தில் முதல்வராக துடித்தவர் தான் சசிகலா.ஜெயலலிதாவின் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குவித்து, அ.தி.மு.க.,வுக்கு இருந்த நற்பெயரை 'டேமேஜ்' செய்ததில், சசிகலாவுக்கு பெரும் பங்கு உண்டு. இது தான், அ.தி.மு.க.,வுக்கு அவர் செய்த 'நற்பணி!'தற்போது அ.தி.மு.க.,வில் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கிறார். அவர், அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைப்பதெல்லாம், சுயநலத்திற்கு தானே தவிர, கட்சி நலனுக்காக அல்ல.
அ.தி.மு.க., தலைமையும், தொண்டர்களும், சசிகலாவிடம் உஷாராக இருப்பது நல்லது.


அவர் போதகர் அல்ல!எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிறிஸ்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மத ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார். அவர் உண்மையான மத போதகரல்ல; வெள்ளை அங்கி அணிந்த மத அரசியல்வாதி! மத போதகராக இருந்தால், மக்களுக்கு நற்போதனைகளை கூறுபவராக மட்டுமே அவர் இருந்திருப்பார். இப்படி அநாகரிகமாக பேசியிருக்க மாட்டார்.அவரை போன்ற போதகர்களால் தான், அனைத்து கிறிஸ்துவ சபைகளிலும் ஜாதி பிரச்னைகள் அதிகரித்து உள்ளன.கிறிஸ்துவ மதத்திற்குள் ஜாதி வேற்றுமை இல்லையென, பலர் எண்ணுகின்றனர். ஆனால் கிறிஸ்துவ மதத்திற்குள் ஜாதி புரையோடிஉள்ளது.
ஒரு சபை கிறிஸ்துவர்கள், வேறொரு சபைக்கு செல்லவே மாட்டார்கள். போதகர்களும் ஜாதி பார்த்தே நியமிக்கப்படுவர்.கிறிஸ்துவ மதத்தை பரப்ப வேண்டிய அவசியமில்லை. அந்த மாற்றம் தானாக நிகழ வேண்டும்.மருத்துவமனை, பஸ் நிலையம் என அனைத்து இடங்களுக்கும் சென்று, கிறிஸ்துவம் தொடர்பான புத்தகங்கள், நோட்டீஸ் ஆகியவற்றை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.கிறிஸ்துவர் என்றால் நேர்மையான அதிகாரியாக இருப்பார்; இலவசமாக மருத்துவம் பார்ப்பார்; தீங்கு செய்ய மாட்டார் என பெயரெடுக்க வேண்டும். நல்லொழுக்கத்தின் அடிப்படையில் கிறிஸ்துவராக வாழ்ந்தால் போதும், பலரும் நம் மதத்தை
விரும்புவர்.அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தால், ஜார்ஜ் பொன்னையா போன்றோர், 'போதகர்' என்ற போர்வையில் இருக்க முடியாது.ஜார்ஜ் பொன்னையா மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இனி என்ன நடக்கும்?எஸ்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., சார்பில் பேனர்கள் வைக்க மாட்டோம்' என சென்னை உயர் நீதிமன்றத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சத்திய பிரமாண வாக்குமூலம் செய்திருக்கிறார். அப்போது அவர், எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.'சத்திய பிரமாணமாவது... வெங்காயமாவது' அதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த போது கொடுத்தது; இப்போது தி.மு.க., ஆளுங்கட்சி. இனி யாருக்கும் தி.மு.க.,வினர் கட்டுபட மாட்டார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில், எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து வைக்க சேப்பாக்கம் - -திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ., உதயநிதி வந்திருந்தார்.அவரை வரவேற்று குமணன் சாவடி முதல் பூந்தமல்லி வரை 2 கி.மீ.,க்கு வழி நெடுகிலும் பேனர், கொடி, தோரணம் ஆகியவை கட்டப்பட்டிருந்தன.தெரியாமல் தான் கேட்கிறோம்...இதெல்லாம் வழி நெடுக அமைத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாவிட்டால், உதயநிதி கையில் வைத்திருக்கும் கத்தரிக்கோல் எம்.எல்.ஏ., அலுவலக கட்டட ரிப்பனை வெட்டாதா?திறப்பு விழா முடிந்து இரண்டு நாட்களுக்கு பின், 'பேனர் வைக்கும் கலாசாரத்தை தி.மு.க.,வினர் அறவே கைவிட வேண்டும். 'மீறினால் கட்சி தலைமை கடும் நடவடிக்கை எடுக்கும்' என, அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை விடுத்துள்ளார்.இனி என்ன நடக்கும்...பேனர் வைத்ததற்காக பூந்தமல்லி நகர தி.மு.க., செயலர் ரவிகுமார், ஒன்றிய செயலர் ஜெயகுமார் ஆகியோரை, கழக கட்டுப்பாட்டை மீறியதற்காக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக
நீக்கும்.அந்த செய்தி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்படும். உடனே, 'முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுக்கிறார்' என, தி.மு.க.,வினரே பெருமையாக தகவல் பரப்புவர்.இரண்டு நாட்களுக்கு பின், அந்த இருவரும் கட்சியில் சேர்க்கப்பட்டு, பதவி உயர்வும் சத்தமில்லாமல் வழங்கப்படும்.அது தான் தி.மு.க.,வின் அரசியல்!

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-ஜூலை-202106:24:39 IST Report Abuse
D.Ambujavalli நம்ம பிள்ளையாண்டானுக்காக அடிக்கு ஒரு பேனர் வைத்தாலும் எந்த கோர்ட்டும் ஒன்றும் செய்யாது ஆடி கழித்த ஆறாம் மாதம் ‘ஆக் ஷன்’ எடுத்துவிடுவார் ‘மனு நீதி சோழன்’ அதற்கும் விளம்பரம், துதிப்பாடல்கள் விடியாத தலைவலி இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X