பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
புதுடில்லி:'பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபபட்ட பொது நல மனுவில், 'கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, போக்குவரத்து சந்திப்புகளிலும், சந்தைகளிலும், பொது இடங்களிலும் பிச்சை எடுக்க தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.நோட்டீஸ்நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர்

புதுடில்லி:'பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபபட்ட பொது நல மனுவில், 'கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, போக்குவரத்து சந்திப்புகளிலும், சந்தைகளிலும், பொது இடங்களிலும் பிச்சை எடுக்க தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.


நோட்டீஸ்

நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. வறுமையின் காரணமாகவே பிச்சை எடுக்கின்றனர். பிச்சை எடுப்பதை உயர் வர்க்கத்தின் கண்ணோட்டத்திலிருந்து நாங்கள் பார்க்கவில்லை. பிச்சை எடுப்பதற்காக மக்கள் வீதிகளில் இறங்குவது அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் காட்டுகிறது.

இது ஒரு சமூக, பொருளாதாரப் பிரச்னை. ஒரு உத்தரவால் இதை சரி செய்ய முடியாது. சமூக நல கொள்கைகளை வகுத்து இந்தப் பிரச்னைக்கு அரசுகள் தான் தீர்வு காண வேண்டும்.இது பற்றி விளக்கம் அளிக்கக் கோரி, மத்திய அரசு மற்றும் டில்லி மாநில அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படும்.


தடுப்பூசி

பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே கொரோனாவுக்கு சிகிச்சை பெறவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அனைத்து உரிமைகளும் உள்ளன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X