பொது செய்தி

இந்தியா

'கோவாக்சின்' அங்கீகாரம் ரத்து செய்தது பிரேசில்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
ஐதராபாத்:'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசிக்கு வழங்கிய அவசரகால அங்கீகாரத்தை பிரேசில் ரத்து செய்துள்ளது.தெலுங்கானாவின் 'பாரத் பயோடெக் நிறுவனம்' கோவாக்சின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கிறது.இதனை தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பயன்படுத்துவதற்காக, அந்நாட்டின் இரு நிறுவனங்களுடன், பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்தது. கோவாக்சின் தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகள்

ஐதராபாத்:'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசிக்கு வழங்கிய அவசரகால அங்கீகாரத்தை பிரேசில் ரத்து செய்துள்ளது.

தெலுங்கானாவின் 'பாரத் பயோடெக் நிறுவனம்' கோவாக்சின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கிறது.இதனை தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பயன்படுத்துவதற்காக, அந்நாட்டின் இரு நிறுவனங்களுடன், பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்தது. கோவாக்சின் தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகள் துவங்கவிருந்த நிலையில், தடுப்பூசி கொள்முதலில் அந்த நிறுவனங்கள் முறைகேடில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பிரேசில் சுகாதாரத் துறையினர் சமீபத்தில் பரிசோதனைக்கு தடை விதித்தனர்.இதனால் பிரேசில் நிறுவனங்களுடன் கோவாக்சின் கொள்முதல் தொடர்பாக மேற்கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக, பாரத் பயோடெக் அறிவித்தது. இது தொடர்பாக தென் அமெரிக்காவில் உள்ள தங்கள் கூட்டு நிறுவனத்திற்கும் பாரத் பயோடெக் தகவல் தெரிவித்தது.

அடுத்தக்கட்டமாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று பிரேசிலில் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கான விண்ணப்பத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது. இதுகுறித்த அவர்களின் அறிக்கையில், 'கோவாக்சின் தடுப்பூசிக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்கான தற்காலிக அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது' என, கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X