எடியூரப்பா ஆதரவாளர் தற்கொலை

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சாம்ராஜ் நகர்: எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த துக்கம் தாளாமல், சாம்ராஜ் நகரைச் சேர்ந்த அவரது ஆதரவாளர் ரவி என்பவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகா, போம்லாபுரா கிராமத்தைச் சேர்ந்த, ரவி, 35, என்ற எடியூரப்பா ஆதரவாளர் தனது ஓட்டல் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறப்பதற்கு முன் அவர் எழுதியிருந்த

சாம்ராஜ் நகர்: எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த துக்கம் தாளாமல், சாம்ராஜ் நகரைச் சேர்ந்த அவரது ஆதரவாளர் ரவி என்பவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகா, போம்லாபுரா கிராமத்தைச் சேர்ந்த, ரவி, 35, என்ற எடியூரப்பா ஆதரவாளர் தனது ஓட்டல் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இறப்பதற்கு முன் அவர் எழுதியிருந்த கடிதத்தில், 'எடியூரப்பா அழுதது என்னால் தாங்க முடியவில்லை. அவர் மக்கள் தலைவர்' என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, எடியூரப்பா வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' அறிக்கை:
அரசியலில் ஏற்றம், இறக்கம் சகஜம். இதற்காக யாரும் எவ்விதமான துயர முடிவையும் எடுக்கக் கூடாது. அதனால் குடும்பத்துக்கு ஏற்படும் இழப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதரவாளர்கள் எந்த தவறான முடிவையும் எடுக்க கூடாது என்று கை கூப்பி கேட்டுகொள்கிறேன். ரவி குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் பங்கேற்பேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X