மருத்துவ கவுன்சில் தலைவர் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி| Dinamalar

மருத்துவ கவுன்சில் தலைவர் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

Added : ஜூலை 27, 2021
Share
புதுடில்லி:'மத பிரசாரம் செய்ய இந்திய மருத்துவ சங்கத்தை பயன்படுத்த கூடாது' என, விசாரணை நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, அதன் தலைவர் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக ஜெயலால் உள்ளார். இவர் ஹிந்து மதத்துக்கு எதிராகவும், ஆயுர்வேத மருத்துவத்துக்கு எதிராகவும் பேசி ஹிந்துக்களை

புதுடில்லி:'மத பிரசாரம் செய்ய இந்திய மருத்துவ சங்கத்தை பயன்படுத்த கூடாது' என, விசாரணை நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, அதன் தலைவர் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக ஜெயலால் உள்ளார். இவர் ஹிந்து மதத்துக்கு எதிராகவும், ஆயுர்வேத மருத்துவத்துக்கு எதிராகவும் பேசி ஹிந்துக்களை கிறிஸ்துவர்களாக மதமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ஜெயலாலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டில்லி நீதிமன்றம், 'மத பிரசாரம் செய்ய இந்திய மருத்துவ சங்கத்தை ஜெயலால் பயன்படுத்த கூடாது; அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஜெயலால் ஈடுபடக்கூடாது' என உத்தரவிட்டது.இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் ஜெயலால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் நேற்று தள்ளுபடி செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X