கணவர் வரதட்சணை கொடுமை: மாமனார் பாலியல் தொந்தரவு| Dinamalar

கணவர் வரதட்சணை கொடுமை: மாமனார் பாலியல் தொந்தரவு

Added : ஜூலை 27, 2021
Share
பசவனகுடி: வரதட்சணை வாங்கி வரும்படி கணவர் ஒரு பக்கமும், ஆசைக்கு இணங்கும்படி மாமனார் மற்றொரு பக்கமும், 24 வயது பெண்ணை தொல்லை கொடுத்ததால், மனம் நொந்த அவர், பசவனகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.பெங்களூரு கோரமங்களாவைச் சேர்ந்தவர் ஹரிஷ், 31, என்பவர், 2016, ஏப்., 25ல், பசவனகுடியைச் சேர்ந்த, 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் தம்பதி இருவரும் அமைதியாக

பசவனகுடி: வரதட்சணை வாங்கி வரும்படி கணவர் ஒரு பக்கமும், ஆசைக்கு இணங்கும்படி மாமனார் மற்றொரு பக்கமும், 24 வயது பெண்ணை தொல்லை கொடுத்ததால், மனம் நொந்த அவர், பசவனகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு கோரமங்களாவைச் சேர்ந்தவர் ஹரிஷ், 31, என்பவர், 2016, ஏப்., 25ல், பசவனகுடியைச் சேர்ந்த, 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் தம்பதி இருவரும் அமைதியாக வாழ்ந்து வந்தனர்.
அதன்பின், இருவருக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தாய் வீட்டிலிருந்து, 10 லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி கணவர் வற்புறுத்தியுள்ளார். கணவன் செயலால் மனம் நொந்த பெண்ணின் மீது, மாமனார் ராமகிருஷ்ணாவின், 61, காமப்பார்வை விழுந்துள்ளது. தனது ஆசைகளை நிறைவேற்றும்படி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண், பசவனகுடி காவல் நிலையத்தில் புகார் மூலம் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X