கிராமங்களில் சுதந்திர தின நிகழ்ச்சி: எம்.பிக்களுக்கு பிரதமர் உத்தரவு

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:''சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடும் விதமாக ஒவ்வொரு கிராமத்திலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகொள் விடுத்துள்ளார்.பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் வெறும் அரசு
கிராமங்கள், சுதந்திர தினம்,எம்.பிக்கள் , பிரதமர்  உத்தரவு

புதுடில்லி:''சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடும் விதமாக ஒவ்வொரு கிராமத்திலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகொள் விடுத்துள்ளார்.

பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் வெறும் அரசு நிகழ்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது. மக்களின் பங்களிப்புடன் கூடிய மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும்.பா.ஜ., - எம்.பி.,க்கள் தங்கள் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் இரண்டு கட்சி நிர்வாகிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவினர் கிராமங்கள் தோறும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், 2047ம் ஆண்டில் 100வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும்போது இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மக்களின் ஆலோசனை மற்றும் அறிவுரையை கேட்டு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், பிரதமர் பேசியது குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
28-ஜூலை-202109:27:27 IST Report Abuse
Sampath Kumar ஏன் இந்தனை வருசமா நடத்தலையா? இப்பதான் ஞா ந உதயம் வந்தது போல
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-202106:42:42 IST Report Abuse
Kasimani Baskaran கொண்டாட்டத்தில் மக்களின் பங்களிப்பு அவசியமான ஒன்று. அது போக ஒவ்வொரு அரசியல்க்கட்சியும் தேசக்கொடிக்கு மரியாதை செலுத்தி கொண்டாட வேண்டும். தேசத்தை மதிக்காத கட்சிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்ய வேண்டும்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-ஜூலை-202122:42:09 IST Report Abuse
தமிழவேல் முதலில் RSS மனரீதியில் தேசக்கொடிக்கு மரியாதை தரட்டும்....
Rate this:
Cancel
28-ஜூலை-202101:35:45 IST Report Abuse
அப்புசாமி ரண்டாவது அலையை நகரங்களுக்கு பறந்து பறந்து போய் பரப்பி வெற்றி கண்டோம். மூணாவது அலையை கிராமங்களுக்கு சென்று பரப்பிட வேண்டும். கிராம மக்களையும் அடிச்சு முடக்க வாணாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X