பொருளாதார வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை : நிர்மலா உறுதி

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
''பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். லோக்சபாவில் தி.மு.க., - எம்.பி., பாலு கூறுகையில், ''நடப்பு நிதியாண்டில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது,'' என கேள்வி எழுப்பினார். 14 சதவீதம்இதற்கு மத்திய
பொருளாதாரம்,  வீழ்ச்சி, தடுக்க நடவடிக்கை,  நிர்மலா உறுதி

''பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

லோக்சபாவில் தி.மு.க., - எம்.பி., பாலு கூறுகையில், ''நடப்பு நிதியாண்டில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது,'' என கேள்வி எழுப்பினார். 14 சதவீதம்இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் கூறியதாவது:

கடந்த 2021 - 22 ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி பொருளாதார வளர்ச்சி 14 சதவீத அளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மற்றும் மருத்துவ செலவினங்கள் காரணமாக 9.5 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும். இதை மத்திய ரிசர்வ் வங்கி அறித்துள்ளது. இந்த நிதியாண்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 29 லட்சம் கோடிக்கும் மேல் பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்பட்டது.

உணவு தானியங்கள், பருப்பு வகைககள், மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவை கையிருப்பு உள்ளதால் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சியை தடுக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறதுஇவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இட ஒதுக்கீடு

இந்நிலையில் டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மருத்துவ படிப்புகளுக்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 2017 - 2020 வரையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் 11 ஆயிரம் இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டன.

எனவே இவ்விஷயத்தில் தலையிட்டு அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-ஜூலை-202122:58:07 IST Report Abuse
தமிழவேல் என்னது பொருளாதார வீழ்ச்சியா ? இதுவரைக்கும் நல்லா ஓடிக்கிட்டு இருக்கிறதா சொன்னானுவோலே.... இப்போ ஏன் திடீர்னு வெடி ? இன்னும் வரி போடப் போறானுவோளா 🤔
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
28-ஜூலை-202122:14:20 IST Report Abuse
Ramamurthy N எல்லா காய்கறிகளும் ரூ100க்கு கம்மியாக இல்லை. கேட்டால் டீசல் விலை அதிகம் என்கிறார் வியாபாரி. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே இருக்கிறது. வரியை குறைக்க மறுக்கிறார்கள். ஆனால் பெரிய முதலாளிகள் அனுபவிக்கிறார்கள். ஏழைகள் படு ஏழைகளாக இருக்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி பொருளாதாரம் வளர்ச்சியை எட்டும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-ஜூலை-202116:26:05 IST Report Abuse
M  Ramachandran ஒரு பாக்கம் தமிழக அரசின் ஊதாரித்தனம் மற்ற பக்கத்தில் மத்திய அரசின் விலைகுறைப்பு செய்ய முனைப்பு காட்டாத நிலை. பல படித்த அமைச்சர்கள் இருந்தும் ஏன் இந்த அலட்சியம். அரசின் கொள்கை தான் என்ன? அயல் நாடுகளில் நல்ல பெயர் ஈட்டி உள்நாட்டில் அதை நிலைநாட்ட எண்ணம் இனமா எதை குறிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X