பொது செய்தி

இந்தியா

திப்பகொண்டனஹள்ளி அணை சீரமைப்பு பணிகள் தீவிரம்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
பெங்களூரு: திப்பகொண்டனஹள்ளி அணை சீரமைப்பு பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற இடையூறுகளால், பணிகள் தாமதமாகிறது. வரும் 2022 மார்ச் அல்லது ஏப்ரலில், பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகரின் பரப்பளவு விரிவடைந்து வருகிறது. மக்கள் தொகை 1.20

பெங்களூரு: திப்பகொண்டனஹள்ளி அணை சீரமைப்பு பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற இடையூறுகளால், பணிகள் தாமதமாகிறது. வரும் 2022 மார்ச் அல்லது ஏப்ரலில், பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகரின் பரப்பளவு விரிவடைந்து வருகிறது. மக்கள் தொகை 1.20 கோடியை எட்டியுள்ளது. வரும் நாட்களில், மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


பெரும் சவால்


எனவே, மக்களின் தேவைக்கு ஏற்ப, குடிநீர் வினியோகிப்பது, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, பெரும் சவாலாக இருக்கும். காவிரி நீரை மட்டுமே நம்பியிராமல், பெங்களூரு மக்களின் குடிநீருக்கு, மாற்று வழியை தேடுவது அவசியம். இல்லையென்றால், எதிர்காலத்தில் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என, வல்லுனர்கள் எச்சரித்திருந்தனர். இதன்படி, குடிநீர் வாரியம், மாற்று வழியை தேடியது. திப்பகொண்டனஹள்ளி அணையை சீரமைக்க, நடவடிக்கை எடுத்துள்ளது.


அணையில் மண்


ஒரு காலத்தில், பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்கி வந்த திப்பகொண்டனஹள்ளி அணையில், தற்போது மண் நிரம்பியுள்ளது. அணையில் கழிவு நீர் கலப்பதால், தண்ணீர் அசுத்தமடைந்துள்ளது. இது குடிநீராக பயன்படுத்துவதற்கு தகுதியாக இல்லை. அணை சீரமைப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு கட்டும் பணிகள் நடக்கிறது. இந்த அணையில், 3.34 டி.எம்.சி., தண்ணீரை சேகரிக்கலாம்.
பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திப்பகொண்டனஹள்ளி அணை, சுத்திகரிக்கும் பணிகள், கடந்த 2019 மார்ச்சில் துவங்கியது. 291.57 கோடி ரூபாய் செலவில், அணை சீரமைப்பது, கழிவு நீர் சுத்தகரிப்பு யூனிட் கட்டும் பணிகள் நடக்கிறது. தற்போது 50 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. அணையில் மண்ணை அள்ளும் பணிகள், தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், கழிவு நீர் சுத்திகரிப்பு யூனிட் அமைக்கும் பணிகள் தாமதமாகிறது.
டெண்டர் அளிக்கும் போது, 120 மாதங்களில் பணிகளை முடிக்க, காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, அணையில், நீர் சுத்திகரிப்பு யூனிட் கட்டும் பணிகள் நடக்கிறது. அணைக்கு வரும் கழிவு நீரை சுத்திகரித்து, ஏரிக்கு அனுப்பப்படும். பணிகள் நடக்கும் இடத்தில், மக்கள் நடமாட்டத்துக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு, தொழிலாளர் பற்றாக்குறையால், பணிகளை நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை.


நவீன தொழில்நுட்பம்

வரும், 2022 மார்ச் அல்லது ஏப்ரலில் பணிகள் முடிய வாய்ப்புள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தண்ணீரை சுத்திகரிக்கும் வசதி செய்யப்படுகிறது. பெங்களூருக்கு தற்போது, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, காவிரி தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன் திப்பகொண்டனஹள்ளி அணையிலிருந்து, தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.
அணையில் தண்ணீர் அசுத்தமடைந்ததால், கடந்த 2012லிருந்து தண்ணீர் வினியோகிப்பது நிறுத்தப்பட்டது. அணை சீரமைத்த பின், இங்கிருந்தே பெங்களூரின் பல்வேறு இடங்களுக்கு, தண்ணீர் வினியோகிக்கப்படும். திப்பகொண்டனஹள்ளி அணை, 1992ல் முதன் முறையாக நிரம்பியது.
நடப்பாண்டு இறுதியில் பணிகள் முடியுமென எதிர்ப்பார்த்தோம். ஆனால், ஊரடங்கு அறிவித்ததால், தொழிலாளர்களில் பலர், தங்களின் சொந்த மாநிலத்துக்கு சென்றனர். இரண்டு மாதங்களாக தொடர்ந்து முயற்சித்து, தொழிலாளர்களை ஒன்று திரட்டி, அழைத்து வந்து பணிகள் துவங்கப்பட்டது. தற்போது பணிகள் வேகம் பிடித்துள்ளது. இவ்வாறு அதிகாரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X