அரசியல் செய்தி

தமிழ்நாடு

உழவாரப் பணி: அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவு திட்டம் துவக்கம்

Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வோர், அனுமதி பெறுவதற்கான இணைய தள பதிவு திட்டம், அறநிலையத்துறை சார்பில் துவக்கப்பட்டது. கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள விரும்புவோர், அறநிலையத் துறை இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்யும் திட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அறநிலையத் துறை தலைமையகத்தில் நடந்தது.தனி களம்இத்திட்டத்தை, சமூகநலன், மகளிர்
உழவாரப் பணி: அறநிலையத் துறை இணையதளத்தில்  பதிவு திட்டம் துவக்கம்

சென்னை:கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வோர், அனுமதி பெறுவதற்கான இணைய தள பதிவு திட்டம், அறநிலையத்துறை சார்பில் துவக்கப்பட்டது.

கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள விரும்புவோர், அறநிலையத் துறை இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்யும் திட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அறநிலையத் துறை தலைமையகத்தில் நடந்தது.


தனி களம்

இத்திட்டத்தை, சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர். பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: கடந்த, 10 ஆண்டுகளில் சீரழிந்துள்ள ஹிந்து சமய அறநிலையத் துறையை நல்லநிலைக்கு கொண்டு வரவும்; கோவில் கும்பாபிஷேகம், தேர், நந்தனம், குளங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவில்களில் உழவார பணிகளை மேற்கொள்ள பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர். முதல் கட்டமாக முதல்நிலை கோவில்களில் இப்பணியை மேற்கொள்ள, அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய வசதியாக, தனி களம் துவக்கப்பட்டுள்ளது.


கும்பாபிஷேகம்

ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானம் உள்ள 530 கோவில்கள் கணக்கிடப்பட்டு உள்ளன. வசதி வாய்ப்புகள் அதிகமுள்ள கோவில்கள் வாயிலாக, மற்ற கோவில்களுக்கு தானியம்வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 12 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்களில் ஒருகால பூஜை நடத்தப்படுகிறது.

இரண்டரை மாதங்களில் 160 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.திருப்பணி துவங்கி நிறைவடையாத கோவில்களை அடையாளம் கண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பதிவு செய்வது எப்படி?

ஹிந்து சமய அறநிலையதுறையின் http://hrce.tn.gov.in யில் சென்று, இ - சேவைகள் பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் உழவாரப்பணியை தேர்வு செய்ய வேண்டும்.பின், கோவில்கள் பட்டியலில் விருப்பமான கோவில், பணி செய்வதற்கு உகந்த தேதி, நேரத்தை அட்டவணையில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்யப்படாத சீட்டை தேர்வு செய்து, பணி செய்ய விரும்புவோரின் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.அதன்பின், பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணிற்கு வரும், ஓ.டி.பி.,யை பதிவு செய்தால் அனுமதி சீட்டு வரும்.அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் கட்டமாக 47 முதுநிலை கோவில்களில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஜூலை-202112:32:07 IST Report Abuse
Bhaskaran செலவு செஞ்சதாக கணக்கு காட்டுவதற்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X