பி.யு.சி., ஆசிரியர்களுக்கு பயிற்சி: கல்வி தரத்தை மேம்படுத்த திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பி.யு.சி., ஆசிரியர்களுக்கு பயிற்சி: கல்வி தரத்தை மேம்படுத்த திட்டம்

Added : ஜூலை 27, 2021
Share
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், பி.யு.சி., ஆசிரியர்களுக்கு பணி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த கல்வியாண்டுக்கான பி.யு.சி., இரண்டாமாண்டில், 82 மாணவர்கள் சிறப்பிடமும், 973 மாணவர்கள் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும் சில மாநகராட்சி

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், பி.யு.சி., ஆசிரியர்களுக்கு பணி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த கல்வியாண்டுக்கான பி.யு.சி., இரண்டாமாண்டில், 82 மாணவர்கள் சிறப்பிடமும், 973 மாணவர்கள் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும் சில மாநகராட்சி பி.யு.சி., கல்வி நிலையங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன. மாநகராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட பல கல்வி நிலையங்களில், ஒருவர் கூட, முதல் வகுப்பில் தேர்ச்சி பெறாத நிலையும் உள்ளது.
இதற்கான காரணம் குறித்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பின்தங்கிய கல்வி நிலையை மேம்படுத்த வேண்டும். எந்த கல்வி நிலையத்திலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லை. கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. மேலும், மாணவர்களின் கல்விதரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு பணி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X