எனக்கு அமைச்சர் பதவி தந்தே ஆக வேண்டும்: துணை சபாநாயகர் ஆனந்த் மாமனி| Dinamalar

எனக்கு அமைச்சர் பதவி தந்தே ஆக வேண்டும்: துணை சபாநாயகர் ஆனந்த் மாமனி

Added : ஜூலை 27, 2021
Share
பெலகாவி: ''எனக்கு அமைச்சர் பதவி தந்தே ஆக வேண்டும். இல்லை என்றால் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வேன்,'' என, துணை சபாநாயகர் ஆனந்த் மாமனி, பா.ஜ., மேலிடத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.பெலகாவி மாவட்டம், சவதத்தி எல்லம்மா தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஆனந்த் மாமனி. இவர் கர்நாடக சட்டசபை துணை சபாநாயகராக பதவி வகிக்கிறார். எடியூரப்பா ஆட்சி காலத்தில், அமைச்சர் பதவி

பெலகாவி: ''எனக்கு அமைச்சர் பதவி தந்தே ஆக வேண்டும். இல்லை என்றால் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வேன்,'' என, துணை சபாநாயகர் ஆனந்த் மாமனி, பா.ஜ., மேலிடத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெலகாவி மாவட்டம், சவதத்தி எல்லம்மா தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஆனந்த் மாமனி. இவர் கர்நாடக சட்டசபை துணை சபாநாயகராக பதவி வகிக்கிறார். எடியூரப்பா ஆட்சி காலத்தில், அமைச்சர் பதவி எதிர்பார்த்த அவருக்கு, துணை சபாநாயகர் பதவி வழங்கி சமாதானப்படுத்தப்பட்டார். ஆனால், இம்முறை அமைச்சர் பதவி வழங்கியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
நான், 2008 முதல், தொடர்ந்து மூன்று முறை ஒரே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளேன். தொகுதி வளர்ச்சிக்காக, பகலிரவு உழைக்கிறேன். புதிய அமைச்சரவையில் எனக்கு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும். இல்லை என்றால் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வேன். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தேன். கட்சி வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுள்ளேன். எனவே, இம்முறை அமைச்சர் பதவி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X