சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராமத்திற்கு செல்லும் குடிநீர் திருட்டு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சோழந்துார் : கிராம பகுதிகளுக்கு செல்லும் குடிநீரை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், டிராக்டர் மூலம் திருடுவதாக ஊராட்சி கூட்டமைப்பு நிர்வாகிகள் புகார் தெரிவித்து உள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான கூட்டு குடிநீர் குழாய்கள் திருச்சி--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கிறது. இவ் வழியாக செல்லும் கூட்டுக்குடிநீர் குழாய்களை சிலர்

சோழந்துார் : கிராம பகுதிகளுக்கு செல்லும் குடிநீரை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், டிராக்டர் மூலம் திருடுவதாக ஊராட்சி கூட்டமைப்பு நிர்வாகிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான கூட்டு குடிநீர் குழாய்கள் திருச்சி--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கிறது. இவ் வழியாக செல்லும் கூட்டுக்குடிநீர் குழாய்களை சிலர் சேதப்படுத்தி, அதில் வெளியேறும் நீரை டிராக்டர் டேங்கர்களில் நிரப்பி விற்பனை செய்து வருகின்றனர்.கிராமப் பகுதிகளுக்கு செல்லும் குடிநீரின் அளவு குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் நிர்வாகி நாகமுத்து கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் குழாய்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்து தண்ணீர் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் சோழந்துார், பிச்சங்குறிச்சி, சீனாங்குடி உள்ளிட்ட கிராமங்கள் குடிநீரின்றி பாதிப்படைந்து வருகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X