பொது செய்தி

இந்தியா

ஆகஸ்ட் முதல் நாடு முழுதும் குழந்தைகளுக்கு தடுப்பூசி

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : குழந்தைகளுக்கு அடுத்த மாதம் முதல், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். ''தடுப்பூசி தயாரிக்க மேலும் பல நிறுவனங்களுக்கு உரிமம்வழங்கப்பட உள்ளதால் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நாடாக இந்தியா உருவெடுக்கும்,'' எனஅவர் தெரிவித்தார்.'அடுத்த மாதம் இறுதியில் கொரோனா
 குழந்தைகள் , தடுப்பூசி ஆகஸ்ட், மத்திய அமைச்சர்

புதுடில்லி : குழந்தைகளுக்கு அடுத்த மாதம் முதல், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். ''தடுப்பூசி தயாரிக்க மேலும் பல நிறுவனங்களுக்கு உரிமம்வழங்கப்பட உள்ளதால் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நாடாக இந்தியா உருவெடுக்கும்,'' எனஅவர் தெரிவித்தார்.

'அடுத்த மாதம் இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்கக்கூடும்' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது.
டில்லி எம்ய்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில், 'செப்., - அக்., மாதங்களில் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புள்ளது' என தெரிவித்தார்.


கட்டுப்படுத்த முடியும்



மேலும், 'இந்த அலையில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை' என கூறினார்.'பாரத் பயோடெக் மற்றும் சைடஸ் கடிலா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் குழந்தைகளுக்கான தடுப்பூசி, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது' எனவும் அவர் கூறினார்.
'சைடஸ் கடிலா நிறுவன தடுப்பூசியின் பரிசோதனைகள் முடிந்துவிட்டதால், செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்' என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:அடுத்த மாதம் முதல், குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பல நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிக்க உரிமம் வழங்கப்பட உள்ளன. எனவே, தடுப்பூசி தயாரிப்பில் உலக அளவில் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும். இதன் வாயிலாக கொரோனா பரவலை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும். நாடு முழுதும் பள்ளிகளை திறக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


ஆதாரமற்றது



இதற்கிடையே, இம்மாத இறுதிக்குள் 50 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில், 'இந்த இலக்கை அடைவது சாத்தியமில்லை' என, சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதன் விபரம்:மத்திய அரசின் தடுப்பூசி இலக்கு சாத்தியமில்லை என வெளியாகி உள்ள செய்தி, அடிப்படை ஆதாரமற்றது; அதில் உண்மையில்லை.
இம்மாத இறுதிக்குள், 51.60 கோடி 'டோஸ்' தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்று தான் கடந்த மே மாதம் மத்திய அரசு அறிவித்தது.கடந்த ஜன., முதல் ஜூலை 31 வரை 51.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.


இலக்கு



இந்த தடுப்பூசிகள் அனைத்தும் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவை படிப்படியாக மக்களுக்கு போடப்படும்.கடந்த ஜனவரியில் இருந்து இன்றைய தேதி வரை 45.70 கோடி டோஸ் தடுப்பூசிகள் நாடு முழுதும் வினியோகிக்கப்பட்டுள்ளன.மேலும் 6.03 கோடி டோஸ், வரும் 31ம் தேதிக்குள் வினியோகிக்கப்படும். இதை சேர்த்தால் 51.73 கோடி என்ற இலக்கை மத்திய அரசு எட்டிவிடும்.நம் நாட்டில் 44.19 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலக அளவில் இது மிகப்பெரிய எண்ணிக்கை. இதில் 9.60 கோடி பேருக்கு இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளன.ஜூலையில் மட்டும், 10.62 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுஉள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
28-ஜூலை-202112:47:43 IST Report Abuse
Visu Iyer தடுப்பூசி தயாரிக்கும்.. ஆனால் கொரானாவை ஒழிக்காது என்று சொல்வது போல இருக்க்கிறதை பார்த்தால்.. .. இந்தியாவின் அடுத்த பிரதமர் யாராக இருக்கும் என்பதை நீங்களே இப்போதே சொல்லி விடலாம். இல்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X