சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் நகை திருட்டு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : காய்கறி வாங்கச் சென்ற மூதாட்டியிடம் முகக்கவசம் வழங்குவது போல் நடித்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் தங்க செயின் திருடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு நாகலிங்கம் மனைவி அங்கம்மாள் 62. நேற்று காலை காய்கறி வாங்க அரண்மனை பகுதிக்கு வந்தார்.அவரிடம் இரண்டு பேர் பேசியுள்ளனர். பின்னர் முகக்கவசம் தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று

ராமநாதபுரம் : காய்கறி வாங்கச் சென்ற மூதாட்டியிடம் முகக்கவசம் வழங்குவது போல் நடித்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் தங்க செயின் திருடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு நாகலிங்கம் மனைவி அங்கம்மாள் 62. நேற்று காலை காய்கறி வாங்க அரண்மனை பகுதிக்கு வந்தார்.அவரிடம் இரண்டு பேர் பேசியுள்ளனர். பின்னர் முகக்கவசம் தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று வழங்கினர். அப்போது, திருட்டு அதிகம் நடப்பதால் நகைகளை கழற்றி பத்திரமாக வைக்க வேண்டும், என அறிவுரை கூறுவது போல நடித்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை வாங்கி பொட்டலமாக மடித்து கொடுத்தனர்.

அவர்கள் சென்ற பின் பொட்டலத்தை மூதாட்டி பிரித்த போது நகைகள் இல்லை. ஏமாற்றப் பட்டதை அறிந்த அங்கம்மாள் பஜார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X