ஆக., 6ல் கண்டிப்பாக ஆஜராகும்படி அமைச்சருக்கு நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆக., 6ல் கண்டிப்பாக ஆஜராகும்படி அமைச்சருக்கு நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூலை 27, 2021
Share
சென்னை:வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், அமைச்சராக இருந்தாலும், ஆகஸ்ட், 6ல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என, செந்தில் பாலாஜிக்கு, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.புகார்கரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி. தற்போது, மின்துறை அமைச்சர். இவர், 2011 - 2015ல், அ.தி.மு.க., அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, வேலை

சென்னை:வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், அமைச்சராக இருந்தாலும், ஆகஸ்ட், 6ல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என, செந்தில் பாலாஜிக்கு, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


புகார்

கரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி. தற்போது, மின்துறை அமைச்சர். இவர், 2011 - 2015ல், அ.தி.மு.க., அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி, 81 பேரிடம், 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர், செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்படி, செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு, சகாயராஜ் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.மோசடி தொடர்பாக மேலும் இரு வழக்குகளை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்தனர்.

கடந்த விசாரணையின் போது, ஒரு வழக்கின் குற்றப் பத்திரிகை நகலை, செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் பெற்றார்.நீதிபதி கண்டிப்பு இந்நிலையில், மற்றொரு வழக்கின் விசாரணை நீதிபதி என்.ஆலிசியா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.'அமைச்சர் என்பதாலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட துறை சார்ந்த கூட்டம் இருப்பதாலும் ஆஜராக முடியவில்லை' என, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு, 'அமைச்சராக இருந்தாலும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்; வழக்கு விசாரணை, ஆக., 6க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அன்றைய தினம், செந்தில் பாலாஜி கண்டிப்பாக ஆஜராக வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.குற்றப்பத்திரிகை நகலை வழக்கறிஞரிடம்வழங்கவும், நீதிபதி அனுமதி மறுத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X