சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பாரம்பரிய விவசாயமே சிறந்தது!

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
எல்லா பயிர்களையும், எல்லா பகுதியிலும் விளைவிக்க கூடாது; பாரம்பரியமாக என்ன பயிர்கள் விளையுமோ அதை மட்டுமே விளைவிக்க வேண்டும் என ஆலோசனை கூறும், பிரிட்டனை சேர்ந்த, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் இயற்கை விவசாய பண்ணை நடத்தி வரும் கிருஷ்ணா மெக்கன்சி: கேரட், உருளைக்கிழங்கு, காலிபிளவர் போன்ற காய்கறிகளை எனக்கு பிடிக்கும். முயன்றால், அவற்றையும் இந்த மண்ணில் விளைவிக்க
சொல்கிறார்கள்.... பாரம்பரிய விவசாயமே சிறந்தது!

எல்லா பயிர்களையும், எல்லா பகுதியிலும் விளைவிக்க கூடாது; பாரம்பரியமாக என்ன பயிர்கள் விளையுமோ அதை மட்டுமே விளைவிக்க வேண்டும் என ஆலோசனை கூறும், பிரிட்டனை சேர்ந்த, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் இயற்கை விவசாய பண்ணை நடத்தி வரும் கிருஷ்ணா மெக்கன்சி: கேரட், உருளைக்கிழங்கு, காலிபிளவர் போன்ற காய்கறிகளை எனக்கு பிடிக்கும். முயன்றால், அவற்றையும் இந்த மண்ணில் விளைவிக்க முடியும். ஆனால், அவை இந்த மண்ணின் பயிர்கள் அல்ல. அதனால் அவற்றை இங்கு விளைவிக்கக் கூடாது. நம் மண்ணில் எது இயற்கையாக விளைகின்றதோ அது தான், அந்த பகுதி மக்களின் உணவு.

இப்படித் தான் நம் முன்னோர் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்துள்ளனர். அது தான் நம் தமிழர்களின் மரபும் கூட. அந்த மரபை நோக்கி திரும்புவது தான் இந்த மண்ணுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனும் கூட.நான் நடத்தி வரும் விவசாய பண்ணையில் பயிற்சி பெற ஏராளமானோர் வருகின்றனர். அவர்களுக்கு நான் சொல்வது, நம்ம விவசாயம் காசை மட்டும் குறிக்கோளாகக் கொண்டதாக இருக்கக் கூடாது. அதே நேரத்தில், வருமானம் இல்லாமல் விவசாயமும் செய்ய முடியாது. இயற்கை விவசாயத்தை நாம் முறைப்படி செய்ய வேண்டும்.நிலம் நமக்கு தெய்வம் மாதிரி. அந்த தெய்வத்திற்கு, விஷம் போன்ற ரசாயனத்தை கொடுக்கலாமா... அதனால் தான், நிலத்தின் தன்மை மாறாத இயற்கை உரங்களை நிலத்திற்கு போட வேண்டும் என்கிறேன்.ரொம்ப சுலபமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு பயிர் மூன்று மாதங்களில் விளையும் என்றால், அதை மூன்று மாதங்களுக்கு விட வேண்டும்.

உரங்களை போட்டு, வேகமாக உற்பத்தி செய்ய துாண்டக் கூடாது. அப்படி செய்தால், இயற்கைக்கு முரணான விஷயங்கள் தான் வேளாண்மையில் கிடைக்கும்.அதுபோல, ஒரே பயிரை நம்பி விவசாயிகள் இருக்கக் கூடாது. காடு மாதிரி இங்கு மரங்கள் வளர்ந்துள்ளன.நிழல் இருக்கும் இடத்தில் மஞ்சள், இஞ்சி, திப்பிலி, அன்னாசி போன்ற பயிர்களையும், வெயில் இருக்கும் இடங்களில் வரகு, சாமை மாதிரியான பயிர்களையும் விளைவிக்கிறேன்.உங்களுக்காக, இங்கு விளையும் பயிர்களை வைத்து ஒரு மேஜிக் செய்கிறேன். கொஞ்சம் நன்னாரி வேர்களை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வேர்களை நசுக்கி போட்டு, 200 மி.லி., தண்ணீரில் சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். அதில், 15 சங்கு பூக்களை போட வேண்டும். இப்போது, அந்த தண்ணீர் பச்சை நிறத்தில் மாறி இருக்கும்.இப்போது, அந்த கொதித்த தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டால், ஊதா நிறத்திற்கு மாறி விடும். இந்த தேனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது நான் கண்டுபிடித்தது என நினைக்காதீர்கள். நம் தமிழர்கள் காலம் காலமாக தயாரித்து அருந்தியது!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X