எடியூரப்பா தைரியமூட்டினார்: மாஜி அமைச்சர் நாகராஜ்

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
பெங்களூரு: ''எதற்கும் அஞ்ச வேண்டாம், நல்லதே நடக்கும் என்று எனக்கு எடியூரப்பா தைரியமூட்டினார். மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள் ரகசியக் கூட்டம் நடத்தவில்லை,'' என, முன்னாள் அமைச்சர் நாகராஜ் தெரிவித்தார்.எடியூரப்பா ஆட்சியில், நகராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் நாகராஜ். பதவி பறிபோன நிலையில், பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள காவேரி இல்லத்துக்கு நேற்று காலை

பெங்களூரு: ''எதற்கும் அஞ்ச வேண்டாம், நல்லதே நடக்கும் என்று எனக்கு எடியூரப்பா தைரியமூட்டினார். மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள் ரகசியக் கூட்டம் நடத்தவில்லை,'' என, முன்னாள் அமைச்சர் நாகராஜ் தெரிவித்தார்.
எடியூரப்பா ஆட்சியில், நகராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் நாகராஜ். பதவி பறிபோன நிலையில், பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள காவேரி இல்லத்துக்கு நேற்று காலை வந்து, காபந்து முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின், அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக செயல்பாடு, அபிவிருத்தி; எடியூரப்பாவின் தலைமை ஏற்று, காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தேன். ஆனால், இடையில் முதல்வர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை. எடியூரப்பா, பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தவர்.
என்னை அமைச்சராக்கினாலும் பரவாயில்லை. பதவி வழங்கவில்லை என்றாலும் கவலை இல்லை. மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள் ரகசிய கூட்டம் நடத்தவில்லை. கர்நாடகாவுக்கு எடியூரப்பா தான் தலைவர். நாட்டுக்கு மோடி தான் தலைவர். எதற்கும் அஞ்ச வேண்டாம், நல்லதே நடக்கும் என்று எனக்கு தைரியமூட்டினார். கட்சி தலைமை, யாரை முதல்வராக்கினாலும் அவர் கீழ் பணியாற்றுவோம். கட்சிக்கும், மாநிலத்துக்கும் பணியாற்றும் நபராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X