பொது செய்தி

தமிழ்நாடு

நீண்டதுார தள்ளுவண்டி

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சாயல்குடி : குளம், கண்மாய் பகுதிகளில் தண்ணீர் எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுஉள்ள தள்ளுவண்டியின் விலை உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பெண்கள் குடங்களுடன் பல்வேறு இடங்களுக்கு அலைய வேண்டிய நிலை இருந்தது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஒரே நேரத்தில் 4 முதல் 5 குடங்கள் வரை தண்ணீரை தள்ளி வரும்

சாயல்குடி : குளம், கண்மாய் பகுதிகளில் தண்ணீர் எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுஉள்ள தள்ளுவண்டியின் விலை உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பெண்கள் குடங்களுடன் பல்வேறு இடங்களுக்கு அலைய வேண்டிய நிலை இருந்தது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஒரே நேரத்தில் 4 முதல் 5 குடங்கள் வரை தண்ணீரை தள்ளி வரும் வகையில் தள்ளுவண்டிகள் அமைக்கப்பட்டுள்ளது,2007ல் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகும் சாயல்குடி கடலாடி சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி நீரை சேகரிப்பதற்காக பெண்கள் பல கி.மீ., துாரம் இந்த வண்டியுடன் செல்கின்றனர்.

சாயல்குடி தள்ளுவண்டி தயாரிப்பாளர் கார்த்திக் கூறியதாவது:கொரோனா ஊரடங்கிற்கு முன்பு ஒரு தள்ளுவண்டி ரூ. 3,300 இருந்து 3500 வரை விற்பனையானது.தற்போது ரூ.3800 முதல் 4000 வரை விற்பனை செய்யப்படுகிறது.விலை உயர்வால் குறைந்த அளவே கிராமங்களில் வாங்கிச் செல்கின்றனர். தள்ளுவண்டி விறகு சேகரித்தல், வயல் வெளிக்கு உரமூடைகளை கொண்டு செல்லுதல் உள்ளிட்ட அத்தியாவசியப்பணிகளுக்கும் பயன்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X