பொது செய்தி

தமிழ்நாடு

தலைமை காவலருக்கு டி.ஜி.பி., பாராட்டு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
சென்னை:உயிரை பணயம்வைத்து குற்றவாளியை பிடிக்க முயன்ற தலைமை காவலரை, டி.ஜி.பி., சைலேந்திர பாபு பாராட்டினார்.திருச்சி மாநகர தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சரவணன். சமீபத்தில், இவர் ரோந்து பணியில் இருந்த போது, கார் ஒன்று நிற்காமல் சென்றது. இதையடுத்து, வாகனத்தில் முன்பக்கம் தொற்றிச் சென்று மடக்கி பிடிக்க முயன்ற போது, துாக்கி வீசப்பட்டார்.தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட
 தலைமை காவலருக்கு  டி.ஜி.பி., பாராட்டு

சென்னை:உயிரை பணயம்வைத்து குற்றவாளியை பிடிக்க முயன்ற தலைமை காவலரை, டி.ஜி.பி., சைலேந்திர பாபு பாராட்டினார்.

திருச்சி மாநகர தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சரவணன். சமீபத்தில், இவர் ரோந்து பணியில் இருந்த போது, கார் ஒன்று நிற்காமல் சென்றது. இதையடுத்து, வாகனத்தில் முன்பக்கம் தொற்றிச் சென்று மடக்கி பிடிக்க முயன்ற போது, துாக்கி வீசப்பட்டார்.தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட காரை மடக்கிப் பிடித்தனர். காரை ஓட்டி வந்த நபரை கைது செய்ததுடன், காரில் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

உயிரை பணயம்வைத்து காரை விரட்டி சென்ற தலைமை காவலர் சரவணன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது வீரச் செயலை பாராட்டி, தமிழக டி.ஜி.பி.,சைலேந்திர பாபு, 25 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை அறிவித்து உள்ளார். மேலும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தலைமை காவலர் சரவணனுக்கு ஆறுதல் கூறியதுடன், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க, திருச்சி மாநகர கமிஷனருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X