செக் போஸ்டில் பெண் போலீசார் அவதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செக் போஸ்டில் பெண் போலீசார் அவதி

Added : ஜூலை 27, 2021
Share
கருமொழி : நடமாடும் கழிப்பறை வாகனம் வேறு பகுதிக்குசென்றதால் பெண் போலீசார் சிரமப்படுகின்றனர். திருவாடானை தாலுகாவில் எஸ்.பி.பட்டினம் மற்றும் கருமொழியில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு வாகன சோதனைக்காக அமைக்கப்பட்ட இந்த செக்போஸ்ட்களில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுக்கு வசதியாக கருமொழி செக்போஸ்டில் நடமாடும்

கருமொழி : நடமாடும் கழிப்பறை வாகனம் வேறு பகுதிக்குசென்றதால் பெண் போலீசார் சிரமப்படுகின்றனர்.

திருவாடானை தாலுகாவில் எஸ்.பி.பட்டினம் மற்றும் கருமொழியில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு வாகன சோதனைக்காக அமைக்கப்பட்ட இந்த செக்போஸ்ட்களில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுக்கு வசதியாக கருமொழி செக்போஸ்டில் நடமாடும் கழிப்பறை வாகனம் நிறுத்தப்பட்டது. இந்த வாகனம் சில நாட்களுக்கு முன்பு வேறு பகுதியில் உள்ள செக்போஸ்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் இங்கு பணியில் உள்ள பெண் போலீசார் அவதிப்படுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X