பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக பொறுப்பேற்கும் நகராட்சி கமிஷனருக்கு... காத்திருக்கும் சவால்!விரைவில் தீர்வு காண பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Added : ஜூலை 27, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, கடைகளின் வாயிலாக வர வேண்டிய வாடகை பாக்கி ரூ.4 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சரியாக நடைபெறாமல் உள்ளது. புதிதாக பொறுப்பேற்கும் நகராட்சி கமிஷனர், இப்பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, கடைகளின் வாயிலாக வர வேண்டிய வாடகை பாக்கி ரூ.4 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சரியாக நடைபெறாமல் உள்ளது. புதிதாக பொறுப்பேற்கும் நகராட்சி கமிஷனர், இப்பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி கடைகளின் வாயிலாக கிடைக்கும் வாடகை தான், வருவாய். நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள், வாடகை தொகை அதிகமாக உள்ளது என்று கூறி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல், வாடகை செலுத்தாமல் உள்ளனர். அதனால், 6 கோடிக்கு மேல் வாடகை பாக்கி இருந்தது.இதற்கு முன்பு இருந்த கமிஷனர் சுரேஷ்குமார், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், 2 கோடி ரூபாய் வாடகை வசூலிக்கப்பட்டது. அதற்குள் தமிழக சட்டசபை தேர்தல் வந்ததால், வாடகை வசூலிக்கும் பணி மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார், வால்பாறை நகராட்சிக்கு மாற்றப்பட்டார். அதனால் வாடகை வசூல் செய்யும் பணி, அப்படியே நின்றது. தற்போது நகராட்சி கடைகளின் வாடகை பாக்கி, 4 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க, மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. நகராட்சிக்கு போதிய வருவாய் ஏதும் இல்லாததால், குறிப்பிட்ட தேதியில், நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. மின் கட்டணம் பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.
நிறைய பிரச்னைகள் இந்நிலையில், திருச்சி மாநகராட்சியில் உதவி கமிஷனராக பணியாற்றிய விஜயகுமார், மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர் இன்று, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார். இவர் முன் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.நகராட்சி கடைகளின் வாடகையை வசூலிப்பது முக்கிய பணியாக உள்ளது. மேலும் இந்த நகராட்சியில் ஏலம் போகாமல் உள்ள கடைகளை ஏலம் விடவேண்டும்.
இதன் வாயிலாக நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்க செய்ய வேண்டும்.மேலும், மேட்டுப்பாளையம் நகராட்சியில், 93 கோடி மதிப்பில், மூன்று ஆண்டுகளுக்கு முன், பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கின. பணிகள் துரிதமாக நடக்காததால், நகரில் பல இடங்களில், பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டிய குழிகள், சரியாக மூடாமல் உள்ளன. மேலும் பல இடங்களில் குழாய்கள் பதிக்காமலும், கழிவு நீர் தொட்டிகள் கட்டாமலும் உள்ளன. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இப்பிரச்னைகளுக்கு, புதிய கமிஷனர் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X